விராட் கோலி புறக்கணிப்பு! பின்னணியில் ரோகித்? வைரால் வீடியோவால் ரசிகர்கள் கொதிப்பு
ஐசிசி வெளியிட்ட விளம்பரத்தில் புறக்கணிக்கப்பட்ட விராட் கோலி.
வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டதாக ரசிகர்கள் கோபம்.
டி20 உலகக்கோப்பை குறித்த விளம்பரத்தில் விராட் கோலி புறகணிக்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் அக்டோபர் 22ம் திகதி முதல் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இந்திய அணிக்குள்ளேயே புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்திய அணியில் இருந்து விராட் கோலி இன்னமும் ஒதுக்கப்பட்டே வருவதாகவும், தற்போது ஐசிசி-யும் அதே வேலையை செய்து வருவதாகவும் விராட் கோலியின் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மாவுக்கு எதிரான கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன. டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கான விளம்பர வீடியோவை ஐசிசி வெளியிட்டது.
அதில் இந்திய அணி சார்பில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், யுவேந்திர சாஹல் ஆகிய 4 வீரர்கள் இடம்பிடித்திருந்தனர். இதில் முன்னணி வீரரான விராட் கோலி மட்டும் இடம் பெறவில்லை. இதுதான் ரசிகர்களின் கோபத்திற்கு காரணமாகியுள்ளது.