டுவிட்டரில் நடுவரை விமர்சனம் செய்த சுப்மன் கில் - அபராதம் விதித்து ஐசிசி நிர்வாகம் அதிரடி
ஐசிசியின் நடத்தை நெறிமுறைகளை மீறியதாக இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுக்கு அபராதம் விதித்து ஐசிசி நிர்வாகம் அதிரடி காட்டியுள்ளது.
சுப்மன் கில்லுக்கு அபராதம் விதித்த ஐசிசி
நேற்று உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டி நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி படு மோசமாக தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் 2-வது இன்னிங்கில் சுப்மன் கில் ஸ்காட் போலன்ட் வீசிய பந்தை அடிக்க, அதை கேமரூன் க்ரீன் பிடித்தார். அப்போது, தொலைக்காட்சி நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோ, சுப்மன் கில் கேட்ச் பிடிக்கப்பட்டதாக அறிவித்தார்.
இதனையடுத்து, 3-வது நடுவரின் முடிவை சுப்மன் கில் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்து பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஐசிசியின் நடத்தை நெறிமுறைகளை மீறியதாக சுப்மன் கில் மீது ஐசிசி நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. அதாவது, சுப்மன் கில்லின் போட்டிக்கான ஊதியத்திலிருந்து 15 சதவீதம் அபராதம் கட்ட ஐசிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.
????♂️ pic.twitter.com/pOnHYfgb6L
— Shubman Gill (@ShubmanGill) June 10, 2023