ICC Stop Clock Rule: சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்டாப் க்ளாக் விதி வருவதற்கு என்ன காரணம்?
சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விரைவில் ஸ்டாப் க்ளாக் விதி (ICC Stop Clock Rule) நிரந்தரமாக்குவதற்கு ஐசிசி திட்டமிட்டுள்ளது.
கிரிக்கெட் போட்டிகளில் அணிகள் ஓவர்களை குறிப்பிடப்பட்ட நேரத்தில் முடிக்க முடியாமல் போவதாலும், திட்டமிட்ட நேரத்தை விட அதிக நேரம் ஆவதாலும் பார்வையாளர்கள் நீண்ட நேரம் போட்டியை பார்க்கும்படி ஆகிறது.
இதனால் சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விரைவில் ஸ்டாப் க்ளாக் விதி (ICC Stop Clock Rule) நிரந்தரமாக்குவதற்கு ஐசிசி திட்டமிட்டுள்ளது.
இந்த விதியின் மூலம் போட்டி திட்டமிடப்பட்ட நேரத்திற்குள் முடிக்க முடியும் என்று ஐசிசி நம்பப்படுகிறது. இதனால், 2024 -ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் இருந்து சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஸ்டாப் க்ளாக் விதி பயன்படத்தப்படவுள்ளது.
சோதனை
கடந்த 2023 -ம் ஆண்டு ஸ்டாப் க்ளாக் விதியை சோதனையாக ஐசிசி பயன்படுத்தியது. இந்நிலையில், வரும் ஜூன் 1 -ம் திகதி முதல் நிரந்தரமாக்கப்படும் என வாரிய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
JUST IN: ICC to introduce stop-clock rule permanently in white-ball cricket.
— ICC (@ICC) March 15, 2024
Details ?
அதாவது, ஜூன் 2024 முதல் அனைத்து ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளிலும் ‘ஸ்டாப் க்ளாக்’ விதி கொண்டுவரப்படும். இதனால், சுமார் 20 நிமிடங்கள் சேமிக்க முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICC Stop Clock Rule என்பது என்ன?
டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நேரத்தை வீணடிக்கும் அணிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவரை முடிக்க முடியாமல் போனால் எதிரணிக்கு 5 பெனால்டி ரன்கள் கிடைக்கும்.
அதாவது பேட்டிங் செய்யப்படும் அணியின் ஸ்கோரில் 5 ரன்கள் சேர்க்கப்படும். பந்து வீசும் அணியானது முந்தைய ஓவர் முடிந்த 60 வினாடிகளுக்குள் அடுத்த ஓவரை வீச வேண்டும்.
The stop clock introduced to speed up the pace of play in ODIs and T20Is will become permanent from June 1.
— ESPNcricinfo (@ESPNcricinfo) March 15, 2024
The ICC said that during its trial, the stop clock has saved an average of 20 minutes per ODI match ⏱️ pic.twitter.com/sTPpyuHJtJ
இதற்காக ஸ்டேடியத்தில் உள்ள எலக்ட்ரானிக் க்ளாக் 60 -லிருந்து மீண்டும் பூஜ்ஜியமாக கணக்கிடப்படும். அதனை மீறியும் பந்து வீசப்படவில்லை என்றால் 2 எச்சரிக்கைகள் கொடுக்கப்படும்.
அடுத்தடுத்த மீறல்களின்போது எதிரணிக்கு 5 ரன்கள் போனஸாக வழங்கப்படும். இந்த விதியை இன்னும் நடைமுறைக்கு கொண்டுவரவில்லை என்றாலும் ஐசிசி இதுகுறித்து பேசி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |