ஐசிசி டி20 தரவரிசை பட்டியல்: டாப் 3 இடத்திற்கு முன்னேறிய இந்திய வீரர்
ஐசிசியின் டி20 தரவரிசை பட்டியல் வெளியான நிலையில் இந்திய வீரர்கள் சிலர் தரவரிசையில் ஏற்றம் கண்டுள்ளனர்.
மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய திலக் வர்மா
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டித் தொடருக்கு பிறகு வெளியான ஐசிசியின் டி20 தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் திலக் வர்மா 3 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் 187 ஓட்டங்கள் குவித்து திலக் வர்மா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அதே நேரத்தில் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரான அபிஷேக் சர்மா தரவரிசையில் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறார்.
ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஹர்திக் பாண்டியா நான்காவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
ஆனால் இந்திய வீரர் அக்சர் படேல் ஒரு இடம் சரிந்து 10 வது இடத்துக்கு சென்றுள்ளார்.
பந்து வீச்சாளர் தரவரிசை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி பந்து வீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
வருண் சக்கரவர்த்தி இந்த தொடரில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
மேலும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 10 இடங்கள் முன்னேறி 18 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா 3 டி20 போட்டிகளில் மொத்தம் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |