டி20 உலகக் கோப்பைக்கான ஐசிசி அணி அறிவிப்பு! முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்ட இந்திய வீரர்கள்
2021 டி20 உலகக் கோப்பை போட்டியின் மிகவும் மதிப்புமிக்க அணியை தேர்ந்தெடுத்து ஐசிசி அறிவித்துள்ளது.
2021 டி20 உலகக் கோப்பையில் 45 போட்டிகள் மற்றும் வீரர்களின் அபாரமான ஆட்டங்களுக்குப் பிறகு, மிகவும் மதிப்புமிக்க அணியை ஐசிசி தேர்ந்தெடுத்துள்ளது.
ஐசிசி அணியின் கேப்டனாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி-யின் மிகவும் மதிப்புமிக்க அணியில் பிளேயிங் லெவன் உட்பட மொத்தம் 12 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
2021 டி20 உலகக் கோப்பைக்கான ஐசிசி அணி பிளேயிங் வெலன்:
- டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) - 48.16 சராசரியில் 289 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 146.70.
- ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து) - 89.66 சராசரியில் 269 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 151.12.
- பாபர் அசாம் (கேப்டன்) (பாகிஸ்தான்) - 60.60 சராசரியில் 303 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 126.25.
- சரித் அசலங்கா (இலங்கை) - 46.20 சராசரியில் 231 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 147.13.
- மார்க்ராம் (தென் ஆப்பிரிக்கா) - 54 சராசரியில் 162 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 145.94.
- மெயின் அலி (இங்கிலாந்து) - 46 சராசரியில் 92 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 131.42. பவுலிங்கில் 11.00 சராசரியில் 7 விக்கெட்டுகள். 5.50 எகனாமி.
- வனிந்து ஹசரங்கா (இலங்கை) - 23.90 சராசரியில் 119 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 148.75. பவுலிங்கில் 9.75 சராசரியில் 16 விக்கெட்டுகள். எகனாமி 5.20.
- ஆடம் சம்பா (ஆஸ்திரேலியா) - 12.07 சராசரியில் 13 விக்கெட்டுகள். எகனாமி 5.81.
- ஜோஷ் ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா) - 15.90 சராசரியில் 11 விக்கெட்டுகள். எகனாமி 7.29.
- டிரெண்ட் போல்ட் (நியூசிலாந்து) - 13.30 சராசரியில் 13 விக்கெட்டுகள். எகனாமி 6.25.
- அன்ரிச் நார்ட்ஜே (தென் ஆப்பிரிக்கா) - 11.55 சராசரியில் 9 விக்கெட்டுகள். எகனாமி 5.37.
ரிசர்வ் வீரர் -
- ஷஹீன் அப்ரிடி (பாகிஸ்தான்) - 24.14 சராசரியில் 7 விக்கெட்டுகள். எகனாமி 7.04.
2021 டி20 உலகக் கோப்பைக்கான ஐசிசி அணியில், 3 ஆஸ்திரேலியா வீரர்கள், 2 இங்கிலாந்து வீரர்கள், 2 பாகிஸ்தான் வீரர்கள், 2 இலங்கை வீரர்கள், 2 தென் ஆப்பிரிக்க வீரர்கள் மற்றும் ஒரு நியூசிலாந்து வீரர் இடம்பிடித்துள்ளனர்.
The @upstox Most Valuable Team of the Tournament has been announced ?
— ICC (@ICC) November 15, 2021
Does your favourite player feature in the XI?
Read: https://t.co/J3iDmN976U pic.twitter.com/SlbuMw7blo
இந்திய வீரர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.