இலங்கையை துவம்சம் செய்த இந்தியா! இருந்தும் தரவரிசை பட்டியலில் கெத்து காட்டும் இலங்கை கிரிக்கெட் அணி
இலங்கை - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முடிந்துள்ள நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்தியா -இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
அதன்படி 86 சதவீத வெற்றியுடன் அவுஸ்திரேலியா அணி முதல் இடத்தில் உள்ளது. 75 சதவீத வெற்றியுடன் பாகிஸ்தான் அணி 2-வது இடத்திலும் , 66 சதவீத வெற்றியுடன் இலங்கை அணி 3-வது இடத்திலும் உள்ளது.
60 சதவீத வெற்றியுடன் தென் ஆப்பிரிக்க அணி 4-வது இடத்தில் உள்ளது. நேற்று வெற்றி பெற்றதன் மூலம் 54 சதவீத வெற்றியுடன் இந்திய அணி 5-வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.
38 சதவீத வெற்றியுடன் நியூசிலாந்து அணி 6-வது இடத்திலும், 25 சதவீத வெற்றியுடன் வங்கதேச அணி 7வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.