தமிழக வீரர் அஸ்வினுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு: அனைத்து தரவரிசையிலும் இந்தியா முதலிடம்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் மூலம் இந்திய அணியின் வீரர் அஸ்வின் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதலிடத்தில் இந்தியா
அவுஸ்திரேலியாக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்து இருந்தது.
இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 111 ரேட்டிங் புள்ளிகளை வைத்து இருக்கும் அவுஸ்திரேலியா அணியை பின்னுக்கு தள்ளி 115 ரேட்டிங் புள்ளிகளுடன் இந்திய கிரிக்கெட் அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
AP
ஏற்கனவே ஐசிசி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கும் நிலையில், தற்போது டெஸ்ட் தரவரிசையிலும் இந்தியா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அஸ்வினுக்கு வாய்ப்பு
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் இந்திய அணியின் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஐசிசி-யின் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தை அடைவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.
நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்களையும் வீழ்த்தியதன் மூலம் அஸ்வின் (846) புள்ளிகளுடன் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
AFP
அவுஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ்(867) புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்னும் 2 டெஸ்ட் போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில், இந்திய அணியின் வீரர் அஸ்வின் முதலிடத்தை பிடிப்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.