ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்: முதலிடத்தில் எந்த வீரர்?
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பட்டியலில் அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது, இதில் துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் அவுஸ்திரேலியாவின் 891 புள்ளிகளுடன் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 886 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார்.
இந்திய கேப்டன் விராட் கோலி 814 புள்ளிகள் பெற்று 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
கோலி தவிர்த்து ரிஷப் பந்த் மற்றும் ரோஹித் சர்மாவும் டாப்-10இல் உள்ளனர். இருவரும் தலா 747 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் நீடிக்கின்றனர்.