இரண்டாவது இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின்! இலங்கை வீரர்கள் எந்த இடத்தில்? புதிய டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியீடு
டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மர்னூஸ் லபுஸ்சக்னே உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோஹ்லி ஐந்தாவது இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா மற்றும் ரிசப் பாண்ட் ஆகியோர் கூட்டாக 6வது இடத்தில் உள்ளனர்.
இலங்கை வீரர்களை பொறுத்தவரை திமுத் கருணரத்னே 11வது இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் முதலிடத்தில் உள்ளார். தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் அஸ்வின் இரண்டாமிடத்திலும், நியூசிலாந்தின் திம் சவுதி மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
இலங்கை வீரர்களை பொருத்த வரையில் சுரங்கா லக்மல் 21வது இடத்தில் உள்ளார்.