ஐசிசி டி20 தரவரிசை பட்டியல்! புள்ளிகளை இழந்தாலும் 2வது இடத்தில் கெத்தாக இருக்கும் இலங்கை வீரர்... கோலி நிலை இதுதான்
ஐசிசி டி20 கிரிக்கெட் புதிய தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.
புதிய பேட்டிங் தரவரிசை பட்டியல் படி இங்கிலாந்தின் டாவிட் மலன் 841 புள்ளிகளுடன் முதலித்தில் உள்ளார். பாகிஸ்தானின் பாபர் அசாம் 819 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், அவுஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் 733 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும், இந்தியாவின் விராட் கோலி 717 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை - தென்னாப்பிரிக்கா தொடர்பில் சிறப்பாக விளையாடிய தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக் 671 புள்ளிகளுடன் 8ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் டப்ரைஸ் சம்ஷி 775 புள்ளிகளுடன் முதலித்தில் உள்ளார். ஏற்கனவே இரண்டாமிடத்தில் இருந்த இலங்கை வனிந்து டி சில்சா தொடர்ந்து அதே இடத்தில் உள்ளார்.
ஆனால் தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்னர் 764 புள்ளிகளுடன் இருந்த அவரின் புள்ளிகளின் எண்ணிக்கை தற்போது 747ஆக குறைந்துள்ளது.
இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 719 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.