338 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து: பாகிஸ்தானின் அரையிறுதி கனவு நிறைவேறுமா?
பாகிஸ்தான் அணிக்கு 337 ஓட்டங்களை இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.
இங்கிலாந்து-பாகிஸ்தான் மோதல்
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இங்கிலாந்தின் தொடக்க வீரராக களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவ் 61 பந்துகளில் 59 ஓட்டங்கள் குவித்து சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தார்.
Bairstow, Stokes and Root fifties lead England to a strong total in Kolkata ?
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 11, 2023
Pakistan would need to chase it in 6.4 overs to reach the semi-finals ?https://t.co/bOHJ57tS3F | #ENGvPAK | #CWC23 pic.twitter.com/V9YYoPUBcN
சிறப்பாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 76 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் விளாசி 84 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
ஜோ ரூட் தன்னுடைய பங்கிற்கு 72 பந்தில் 60 ஓட்டங்கள் குவித்து அணியின் மொத்த ஸ்கோருக்கு சிறப்பாக உதவினார்.
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 337 ஓட்டங்கள் குவித்தது.
England set a target of 338 for Pakistan ?#ENGvPAK | #CWC23 | #DattKePakistani pic.twitter.com/68HMaYLm8a
— Pakistan Cricket (@TheRealPCB) November 11, 2023
இந்த போட்டியில் அதிக ரன் ரேட் உடன் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி 338 ஓட்டங்கள் இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |