உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா: 4 அணிகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இன்றைய போட்டி
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 4 அணிகளின் எதிர்காலத்தை இன்று நடைபெறும் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி தீர்மானிப்பதால் கிரிக்கெட் ரசிகர் மத்தியில் இந்த போட்டி ஆர்வத்தை தூண்டியுள்ளது.
நியூசிலாந்து-பாகிஸ்தான் மோதல்
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றனர்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
15 ஓவர்கள் நிறைவடைந்துள்ள நிலையில், நியூசிலாந்து அணி 1 விக்கெட்டை மட்டும் இழந்து 97 ஓட்டங்கள் குவித்துள்ளது.
4 அணிகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் போட்டி
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில், தற்போது வரை இந்திய அணி மட்டும் தான் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் மற்றும் ஒரே ஒரு அணியாக அரையிறுதி போட்டிகளுக்கு முன்னேறியுள்ளது.
அதைப் போல வங்கதேச அணி விளையாடிய 7 போட்டிகளில் 1-ல் மட்டும் வெற்றி பெற்று உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுவிட்டால் நடப்பு உலக கோப்பை தொடரில் இருந்து இங்கிலாந்து, பாகிஸ்தான், நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் வெளியேறி விடும்.
இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ஆர்வத்தை தூண்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |