ரசிகர்கள் கொஞ்சம் ஒருதலைபட்சமாக செயல்பட்டார்கள்..! நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்
உலக கோப்பையில் நாக்-அவுட் போட்டிகளுடன் தொடரில் இருந்து வெளியேறுவது நிச்சயம் ஏமாற்றமளிக்கிறது என நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
இந்தியா வெற்றி
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 397 ஓட்டங்கள் குவித்தது.
இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது 50வது ஒருநாள் சதத்தை அடித்து உலக சாதனை படைத்தார். அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 105 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கேப்டன் வில்லியம்சன் 69 ஓட்டங்களும், டேரில் மிட்செல் 134 ஓட்டங்கள் குவித்து இந்திய ரசிகர்களுக்கு மரண பயத்தை காட்டினார்.
ஆனால் ஷமி-யின் சிறப்பான பந்து வீச்சால் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் இருவரும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.
இறுதியில் இந்திய அணி 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
நிச்சயம் வருத்தமளிக்கிறது
போட்டி நிறைவு பிறகு பேசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், உலக கோப்பையில் நாக்-அவுட் போட்டிகளுடன் தொடரில் இருந்து வெளியேறுவது நிச்சயம் ஏமாற்றமளிக்கிறது என தெரிவித்தார்.
இந்திய அணியில் உலக தரம் மிக்க வீரர்கள் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக விராட் கோலியின் புகழை வாழ்த்த தவற மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
வான்கடே மைதானத்தில் மிகச்சிறந்த ரசிகர்கள் இருந்தார்கள், இருப்பினும் ரசிகர்கள் கொஞ்சம் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டனர்.
ஆனால் இந்த போட்டியில் இந்திய அணிக்கு எங்கள் ஆட்டம் நிச்சயம் சவால் வாய்ந்ததாக இருந்தது, இதற்காக பெருமை கொள்கிறேன் என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |