உலக கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை: பிசிசிஐ முக்கிய அறிவிப்பு
உலக கோப்பை அரையிறுதி போட்டிகளின் டிக்கெட் விற்பனை குறித்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிசிசிஐ முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.
பிசிசிஐ முக்கிய அறிவிப்பு
13வது உலக கோப்பை கிரிக்கெட் இந்தியாவில் வைத்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் 10 அணிகளுக்கு இடையிலான லீக் சுற்றுகள் அனைத்தும் நிறைவடைய உள்ள நிலையில் விரைவில் அரையிறுதி போட்டிகள் தொடங்கவுள்ளன.
ICC
ஏற்கனவே அரையிறுதிக்கு இந்தியா, தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில், 4 இடத்திற்கான போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன.
பிசிசிஐ முக்கிய அறிவிப்பு
இந்நிலையில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அதில், இன்று இரவு 8 மணி முதல் BookMyShow இணையதளத்தில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
15ம் திகதி தொடங்கும் முதல் அரையிறுதி மும்பையிலும், 2ம் அரையிறுதி 16ம் திகதி கொல்கத்தாவிலும் மற்றும் 19ம் திகதி இறுதிப்போட்டி குஜராத்தின் அகமதாபாத் மைதானத்திலும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |