உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: இன்று கோப்பையை கைப்பற்றுமா இந்திய அணி
டெஸ்ட் உலக கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி கோப்பையை பெறுவதற்கு இந்திய அணிக்கு இன்னும் 280 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.
இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சு
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவுஸ்திரேலிய அணி 121.3 ஓவர்கள் பேட்டிங் செய்து 469 ஓட்டங்கள் குவித்தது.
ஆனால் இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்து இருந்தது, கேப்டன் ரோகித் சர்மா 15 ஓட்டங்கள், கில் 13 ஓட்டங்கள், புஜாரா 14 ஓட்டங்கள், கோலி 14 ஓட்டங்கள் என முன்னணி வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்தனர்.
இருப்பினும் மூன்றாம் நாள் ஆட்டத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரகானே 89 ஓட்டங்களும், தாகூர் 51 ஓட்டங்களும் குவித்து அணியை மோசமான வீழ்ச்சியில் இருந்து மீட்டனர். முதல் இன்னிங்ஸில் மொத்தமாக 69.4 ஓவர்களை எதிர்கொண்ட அணி வெறும் 296 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
பின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் 173 ஓட்டங்கள் முன்னிலையுடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியை இந்த முறை இந்திய அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக எதிர்கொண்டனர்.
அலெக்ஸ் கேரி மட்டும் 66 ஓட்டங்கள் குவித்து இருந்தார், இரண்டாவது இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டை இழந்து 270 சேர்த்து இருந்த போது டிக்ளேர் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான இலக்கை அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்தது.
இரண்டாவது இன்னிங்ஸில், ஜடேஜா சிறப்பாக 3 விக்கெட்களையும், ஷமி மற்றும் உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றி இருந்தனர்.
Can see a clear gap in Cameron Green two fingers and ball is grounded. It's NOT OUT ! Shubman Gill ?
— adidas India (@india_adidas) June 10, 2023
What do you think ?#WTCFinal #INDvsAUS #TeamIndia pic.twitter.com/4eNmv37oy1
டெஸ்ட் உலக கோப்பையை வெல்லுமா இந்திய அணி
நான்காவது நாள் ஆட்டத்தில் 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 18 ஓட்டங்களுடனும், கேப்டன் ரோகித் சர்மா 43 ஓட்டங்களுடன், புஜாரா 27 ஓட்டங்களுடனும் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியுள்ளனர்.
களத்தில் தற்போது விராட் கோலி 44 ஓட்டங்களுடனும், ரஹானே 20 ஓட்டங்களுடனும் நின்று வருகின்றனர். நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்கள் இதுவரை குவித்துள்ளது.
ICC Photo
5வது மற்றும் இறுதி நாளான நாளை இந்திய அணி வெற்றி பெற 280 ஓட்டங்கள் தேவைப்படுகிறது, இந்திய அணியின் கைவசம் இன்னும் 7 விக்கெட்டுகள் உள்ளன.
இந்நிலையில் இந்திய அணி இந்த 280 ஓட்டங்களை குவித்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லுமா என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்து இருக்கின்றனர்.