டி20 உலக கோப்பையில் அபாரம்! தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த இலங்கை வீரர்
ஐசிசி வெளியிட்டுள்ள டி20 வீரர்களுக்கான சிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் உள்ளார். உலக கோப்பை தொடரில் இரண்டு அரை சதம் உள்ளிட்ட 214 ரன்கள் எடுத்த இலங்கையின் பதும் நிஷங்கா 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கானை பின்னுக்கு தள்ளி வனிந்து ஹசரங்கா 704 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் உலக கோப்பையில் 8 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்களை அள்ளினார்.
ICC
இரண்டாமிடத்தில் ரஷத்கான் 698 புள்ளிகளுடன் உள்ளார். ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் முதலிடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில் வனிந்து ஹசரங்கா எட்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.