பழைய சோறு காலை வேளையில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
பழைய சோறு இருக்கும் இடம், ஆரோக்கியம் குடியிருக்கும் இடம் என சொன்னால் அது மிகையாகாது..!
மிஞ்சிய சாதத்தில் தண்ணீர் ஊற்றி சாப்பிடுவதா என்று முகம் சுளிப்போர், பழைய சோற்றின் மகத்துவத்தை அறிய வேண்டும். சோற்றில் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கும் போது, லாக்டோ பேசிலஸ் பாக்டீரியாக்கள் பெருகுகின்றன.
இது, வயிற்றுக்கு மிகவும் நன்மையை தரும். பழைய சோற்றில் ஸ்டார்ச் எனப்படும் மாவுப்பொருட்கள் அதிகம் இருப்பதால், எளிதில் ஜீரணித்து, உடலுக்கு சக்தியை தருகிறது.
வெயிலில் அலைபவர்கள், பழைய சோற்றை உண்பதால், உடல் வெப்பம் குறையும். சன் ஸ்ட்ரோக் போன்ற பிரச்னை தீரும்.
இன்றும் பழையதுடன் இரண்டு சிறிய வெங்காயம் வைத்து உண்ணும் வழக்கம் உண்டு. இவ்வாறு உண்பதால் வெங்காயத்தின் தன்மை ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைத்து, மாரடைப்பை தடுக்கிறது.
காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும்.
ஒவ்வாமைப் பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வுதரும்.
எல்லாவிதமான வயிற்றுப் புண்களுக்கும் பழைய சோறு வரப்பிரசாதம்.
பழைய சோறு சாப்பிட்டால் மந்த நிலை ஏற்பட்டு, துாக்கம் வரும் என்று சொல்வதில், உண்மையல்ல. மூளை செல்களை துாண்டி, நன்கு சிந்திக்க வைக்கும்.
சிலர் பழைய சோற்றுடன் வெந்தயத்தை ஊற வைத்து அல்லது நல்லெண்ணையை ஊற்றி சாப்பிடுவர். இது மூல நோய்க்கு நல்ல மருந்தாகும்.