இந்தியாவின் ஐஸ்கிரீம் தலைநகரம் எது தெரியுமா?
Icecream என்றால் யாருக்கு தான் பிடிக்காது, சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்கிரீமுக்கு அடிமையானவர்கள் ஏராளம்.
மதிய வேளைகளில் வெயிலுக்கு இதமாக, மாலை நேரங்களிலும் விதவிதமான ஐஸ்கிரீமை ருசிக்கத்தான் ஆசைப்படுவோம்.

ஐஸ்கிரீம் தலைநகரம்
ஃபில்டர் காஃபி, பிரியாணியை போன்று ஐஸ்கிரீமை ருசிக்கவும் ஒரு கூட்டம் உள்ளது என்று தெரியுமா? அதுவும் இந்த ஊரில் இரவு நேரம் வந்துவிட்டால் வண்ணவிளக்குகளால் நகரமே விழாக்கோலமாக காட்சியளிக்கும்.
எந்த வானிலையாக இருந்தாலும் மக்களின் கூட்டம் அலைமோதுவதால் என்னவோ இந்தியாவின் ஐஸ்கிரீம் நகரம் என்றழைக்கப்படுகிறது. எந்த ஊர் என்று யோசிக்கிறீர்களா? கர்நாடகாவின் மங்களூரு தான் அந்நகரம்.

என்ன காரணம்?
பலதரப்பட்ட பிராண்டுகள், ஐஸ்கிரீம் பார்லர்கள் மங்களூருக்கு இந்த பெயரை பெற்றுத்தந்துள்ளன. கிட்டத்தட்ட நூற்றாண்டுக்கு மேலாக சிறப்பு விருந்தாக அல்லாமல் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது ஐஸ்கிரீம்கள், 20ம் நூற்றாண்டுகளில் மங்களூருவுக்கு நுழைந்த ஐஸ்கிரீமை மக்கள் தங்களின் அன்றாட விருப்பமாக மாற்றிவிட்டனர், இதற்கு காரணம் அருகிலுள்ள பால் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சீரான பால் விநியோகமும்.

குடும்ப தொழில்
குடும்ப தொழிலாகவும் ஐஸ்கிரீம்கள் தயாரிக்கப்படுவதால் விற்பனை அதிகரித்தது, கடலோர காலநிலையும் இதற்கு முக்கிய காரணமாகும்.
மிக முக்கியமாக ஒரு சிறிய பகுதிக்குள் அதிக எண்ணிக்கையிலான ஐஸ்கிரீம் கடைகள், கோடை காலமாக இல்லாவிட்டாலும் இரவு உணவுக்கு பின்னர் ஐஸ்கிரீம் சாப்பிடுவது, உள்ளூரிலேயே உருவாக்கப்படும் ஐஸ்கிரீம்கள் போன்றவை ஆகும்.
