ஐந்து வயது சிறுவனை அதிரடியாகக் கைது செய்த ட்ரம்பின் ICE அதிகாரிகள்: வெடித்த சர்ச்சை

Donald Trump Migrants
By Arbin Jan 22, 2026 11:38 PM GMT
Report

ட்ரம்பின் ICE அதிகாரிகள் ஐந்து வயது சிறுவனைக் கைது செய்வதாக வெளியான புகைப்படம் அமெரிக்காவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடும் எதிர்ப்பு

குறித்த சம்பவத்திற்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அந்தக் குழந்தை உண்மையில் கைவிடப்பட்டதாகக் கூறி, ICE அதிகாரிகள் பதிலடி கொடுத்துள்ளனர்.

ஐந்து வயது சிறுவனை அதிரடியாகக் கைது செய்த ட்ரம்பின் ICE அதிகாரிகள்: வெடித்த சர்ச்சை | Ice Detaining Five Year Old Boy

செவ்வாயன்று மினசோட்டாவின் கொலம்பியா ஹைட்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, ​​ஐந்து வயது நிரம்பிய லியாம் கோனெஜோ ராமோஸ் என்ற சிறுவனை ICE அதிகாரிகள் கைது செய்துள்ளதாகப் பள்ளி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராமோஸ் இடம்பெற்ற புகைப்படங்கள், மினசோட்டா நாடாளுமன்ற உறுப்பினர் இல்ஹான் ஓமர் உட்பட பலரால் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.

மிகவும் மோசமான குற்றவாளிகளைத் தாங்கள் குறிவைப்பதாக ICE அதிகாரிகள் கூறுவது தற்போது பொய் என்று நிரூபணமாகியுள்ளதாக இல்ஹான் ஓமர் கூறியுள்ளார்.

ரஷ்ய எண்ணெய் கொள்முதலைக் குறைத்த இந்தியா... சீனாவுக்கு அடித்த ஜாக்பாட்

ரஷ்ய எண்ணெய் கொள்முதலைக் குறைத்த இந்தியா... சீனாவுக்கு அடித்த ஜாக்பாட்

ஆனால், DHS அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தில், அந்தக் குழந்தையின் தந்தை அட்ரியன் அலெக்சாண்டர் கோனெஜோ அரியாஸ், ஈக்வடாரைச் சேர்ந்த ஒரு சட்டவிரோதக் குடியேறி எனவும், அவர் ஜோ பைடன் நிர்வாகத்தால் அமெரிக்காவிற்குள் விடுவிக்கப்பட்டிருந்தார் என்றும் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி, அட்ரியன் அலெக்சாண்டர் கோனெஜோ அரியாஸை ICE அதிகாரிகள் நெருங்கிய நிலையில், அவர் தமது குழந்தையை கைவிட்டுவிட்டு தப்பியுள்ளதாக DHS அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடியேற்ற நடவடிக்கை

மேலும், குழந்தையின் பாதுகாப்புக்காக, ICE அதிகாரிகளில் ஒருவர் குழந்தையுடன் இருந்தபோது, ​​மற்ற அதிகாரிகள் கோனெஜோ அரியாஸைக் கைது செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, பல மாணவர்கள் ICE-யால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பள்ளி கண்காணிப்பாளர் ஜீனா ஸ்டென்விக் கூறினார். ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கை மீதான கடுமையான நடவடிக்கைகளுக்கு மத்தியில்,

ஐந்து வயது சிறுவனை அதிரடியாகக் கைது செய்த ட்ரம்பின் ICE அதிகாரிகள்: வெடித்த சர்ச்சை | Ice Detaining Five Year Old Boy

இந்த மாத தொடக்கத்தில் மினியாபொலிஸைச் சேர்ந்த 37 வயது ரெனி நிக்கோல் குட் என்ற பெண்ணை ஒரு ICE அதிகாரி சுட்டுக் கொன்றதிலிருந்து, அந்த மாகாணத்தில் பதட்டங்கள் அதிகரித்துள்ளன.

DHS நிர்வாகம், தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய குடியேற்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மினசோட்டாவுக்கு கிட்டத்தட்ட 3,000 ICE அதிகாரிகளை அனுப்பியுள்ளது.

இதனிடையே, சிறுவன் ராமோஸ் மற்றும் அரியாஸ் ஆகியோர் டெக்சாஸில் உள்ள ஒரு ICE தடுப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US