Minimum Balance-யை ரூ.50,000 ஆக உயர்த்திய பிரபல வங்கி.., முழு விவரம்
ஐசிஐசிஐ வங்கி புதிய வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.10,000 -லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தியுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி புதிய அறிவிப்பு
இந்தியாவின் இரண்டாவது பெரிய தனியார் கடன் வழங்குநரான ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank), ஆகஸ்ட் 1, 2025 முதல் அதன் சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்பு (MAB) தொகையை அதிகரித்துள்ளது.
இந்த மாற்றமானது ஆகஸ்ட் 1-ம் திகதிக்கு பிறகு திறக்கப்படும் அனைத்து புதிய கணக்குகளுக்கும் பொருந்தும். இதனால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
அதாவது, புதிதாக கணக்கை திறக்கும் பெருநகர மற்றும் நகர்ப்புற வாடிக்கையாளர்கள் அபராதங்களைத் தவிர்க்க ரூ.50,000 மாதாந்திர சராசரி இருப்பைப் பராமரிக்க வேண்டும் .
அதேபோல, அரை நகர்ப்புறங்களில் புதிய வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச சராசரி இருப்பு ரூ.25,000 ஆகவும், கிராமப்புற வாடிக்கையாளர்கள் ரூ.10,000 ஆகவும் பராமரிக்க வேண்டும்.
இதில், வங்கியின் பழைய வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்பு ரூ.10,000 ஆக பராமரிக்க வேண்டும்.
ICICI வங்கியின் பெருநகரக் கிளையில் மாதாந்திர சராசரி இருப்பில் (monthly average balance) ரூ.10,000 பற்றாக்குறை ஏற்பட்டால் ரூ.600 அபராதம் விதிக்கப்படும். ஆனால் தற்போது புதிய விதிகளின் கீழ், கட்டணம் ரூ.500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |