அவுஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் போட்டி ரத்து: அரையிறுதிக்கு முன்னேறிய அவுஸ்திரேலிய அணி!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அவுஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் மோதிய லீக் போட்டி மழை காரணமாக ரத்து முடிவு எட்டப்படாமல் நிறுத்தப்பட்டது.
அவுஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் மோதல்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் ஆட்டத்தில், லாகூரில் இன்று அவுஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ஓட்டங்கள் குவித்தது.
அந்த அணியின் செடிகுல்லா அடல் அதிகபட்சமாக 85 ஓட்டங்கள் சேர்த்தார்.
அதிரடி காட்டிய அவுஸ்திரேலியா
274 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலிய அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் மேத்யூ ஷார்ட் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடினர்.
மேத்யூ ஷார்ட் 20 ஓட்டங்களில் ஆட்டமிழக்க டிராவிஸ் ஹெட் அரைசதம் அடித்து அசத்தினார்.
அவுஸ்திரேலிய அணி 12.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 109 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டது.
போட்டி ரத்து
மழை நின்றதும் போட்டி மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மழை தொடர்ந்து பெய்ததால் போட்டி கைவிடப்பட்டது.
Australia advance to the semis 🇦🇺#ChampionsTrophy #AFGvAUS ✍️: https://t.co/17Q04ho1qz pic.twitter.com/G0ZIFeTl78
— ICC (@ICC) February 28, 2025
இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் குரூப் பி பிரிவில் 4 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு தகுதி முன்னேறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |