பிரான்சில் போலியாக ஒரு பாரீஸ் நகரம் உருவாக்கப்பட இருந்த சம்பவம் உங்களுக்குத் தெரியுமா?
பாரீஸுக்கு வெளியே போலியாக ஒரு பாரீஸ் நகரத்தை உருவாக்க திட்டமிடப்பட்டதாக பல்வேறு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
முதல் உலகப்போரின்போது, ஜேர்மன் விமானப்படையை ஏமாற்றுவதற்காக அப்படி ஒரு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் போலியாக ஒரு பாரீஸ் நகரத்தை உருவாக்க திட்டமிடப்பட்ட விடயம் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ஆம், முதல் உலகப்போரின்போது, பாரீஸுக்கு வெளியே போலியாக ஒரு பாரீஸ் நகரத்தை உருவாக்க திட்டமிடப்பட்டதாம்.
அது எதற்காக என்றால், ஜேர்மன் விமானப்படையை ஏமாற்றுவதற்காகவாம்!
அதாவது, பிரான்சின் முக்கியமான இடங்களை ஒளி விளக்குகள் மூலம் உருவாக்கி, ஜேர்மன் விமானப்படையை ஏமாற்றுவதற்காக அப்படி ஒரு திட்டம் வைத்திருந்ததாம் பிரான்ஸ் அரசு.
Pic: The London Illustrated News / Public domain
1917ஆம் ஆண்டு ஜேர்மானியர்கள் லண்டன் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்கள். 1918ஆம் ஆண்டின் துவக்கத்தில் பாரீஸ் மீதும் குண்டுகள் வீசப்பட்டன.
ஆகவே,ஜேர்மானியர்களின் குண்டு வீச்சுத் தாக்குதலிலிருந்து தப்புவதற்காக திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.
ஜேர்மன் விமானங்கள், தாங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதற்காக இரவு நேரத்தில்தான் தாக்குதல் நடத்தின.
ஆகவே, அதை வைத்து பிரான்ஸ் நாட்டின் சிறந்த எலக்ட்ரீசியன்களில் ஒருவரான Fernand Jacopozzi என்பவருக்கு ஒரு திட்டம் உருவாயிற்று.
அதன்படி, மரப்பலகைகளில் விளக்குகளைப் பொருத்தி, பாரீஸ் நகரிலுள்ள முக்கியமான இடங்களான ஈபிள் கோபுரம், எலிசி மாளிகை ஆகியவற்றை போலியாக உருவாக்குவது என திட்டமிடப்பட்டது.
சாலைகள் முதல், பல்வேறு விடயங்களை விளக்குகள் மூலம் உருவாக்கிய Jacopozzi, ரயில் ஓடுவது போன்ற ஒரு போலித் தோற்றத்தைக் கூட உருவாக்கியிருந்தார்.
ஆனால், அவர் அனைத்தையும் உருவாக்கி முடித்த நேரத்தில், ஜேர்மனி தோற்கத் துவங்கி, பின்வாங்கி வெளியேறிவிட்டது.
ஆகவே, பிரான்சின் திட்டம் பயன்பாட்டுக்கு வராமலே போய்விட்டது.
ஆனால், பின்னர் வரலாற்றாளர்கள் ஒரு சுவாரஸ்யமான விடயத்தைக் கண்டறிந்தார்கள். அது என்னவென்றால், ஜேர்மனியும் தன் பக்கத்தில் அதேபோல ஒரு போலி நகரை உருவாக்கத் திட்டம் வைத்திருந்ததாம்!