காணாமல்போன 24 வயது பெண்: பல மாதங்களுக்கு பின் கிடைத்த உடல் எச்சங்கள்
அமெரிக்காவில் மாயமான இளம்பெண்ணின் உடல் எச்சங்கள், பல மாத தேடலுக்கு பிறகு கிடைத்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
மாயமான இளம்பெண்
அமெரிக்காவின் Idaho-வில் கடந்த 2025ஆம் ஆண்டு, சாண்டல் வில்லியம்ஸ் என்ற 24 வயது இளம் பெண் காணாமல்போனார்.
கடைசியாக அவர், Shoshone கவுண்டியின் Marble Creek பகுதியில் போர்வையை போர்த்தியவாறு நடந்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதலில் அவர் காணாமல்போனபோது, மனநல பாதிப்பு அல்லது நெருக்கடியான சூழலை எதிர்கொண்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியிருந்தனர்.
அதன் பின்னர் நீருக்கடியில் தேடும் குழுக்கள், மோப்ப நாய் படைகள் மற்றும் ட்ரோன்கள் போன்ற வளங்களைப் பயன்படுத்தி தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், சாண்டல் காணாமல்போன ஒரு வாரத்திற்குள் தேடுதல் பணி நிறுத்தப்பட்டதாக அதிகரிகள் அறிவித்தனர்.
எலும்புக்கூடு எச்சங்கள்
இந்த நிலையில் செயின்ட் ஜோ ஆற்றில் கயாக்கிங் சென்ற ஒருவரால், எலும்புக்கூடு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.
அவை சாண்டல் வில்லியம்ஸ் உடையதுதான் என்று Spokane மருத்துவப் பரிசோதகர் உறுதிப்படுத்தியதாக பீப்பிள் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பற்களின் பதிவுகளை ஒப்பிட்டுப் பார்த்ததன் மூலம், Spokane கவுண்டி மருத்துவப் பரிசோதகர் அலுவலகம் இந்த அடையாளத்தை உறுதிப்படுத்தியதாக ஷெரிப் அலுவலகம் கூறியது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |