Instant idiyappam: மாவு பிசைய தேவையில்லை.., 10 நிமிடத்தில் பூ போல இடியாப்பம் செய்யலாம்
இடியாப்பம் என்றாலே வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு.
இதனை தேங்காய் பால், ஆட்டுக்கால் பாயா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
அந்தவகையில், மாவு பிசையாமலையே பூ போல உடனடி இடியாப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி மாவு- 2 கப்
- தண்ணீர்- 3 கப்
- உப்பு- தேவையான அளவு
- தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் அரிசி மாவு, தண்ணீர், உப்பு, தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் அடுப்பை மிதமான தீயில் வைத்து அதில் கலந்து வைத்த வானலை வைத்து கெட்டியாகி வரும்வரை நன்கு கிளறவும்.
சப்பாத்தி மாவு போல் கெட்டியாகி வந்ததும் அடுப்பை அனைத்து மூடி போட்டு ஆறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இடையாப்பம் பிழியும் உரலில் மாவை சேர்த்து பிழிந்துகொள்ளவும்.
பின் அடுப்பில் வாணலை சூடுபடுத்தி அதில் பிழிந்த இடியாப்பம் சேர்த்து 2 நிமிடம் போல் மூடி போட்டி வேகவைத்து எடுத்துக்கொள்ளலாம்.
இதனை நீங்கள் ஆவியிலும் வேகவைக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |