உடலிற்கு வலு சேர்க்க உதவும் சத்தான இடியாப்பம்.., எப்படி செய்வது?
அடிக்கடி இந்த முடக்கத்தான் கீரை இடியாப்பத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.
அந்தவகையில், முடக்கத்தான் கீரையை பயன்படுத்தி சத்தான இடியாப்பம் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி மாவு- 2 கப்
- முடக்கத்தான் கீரை- 1 கைப்பிடி
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் முடக்கத்தான் கீரையை 2- 3 முறை நன்கு அலசி எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் முடக்கத்தான் கீரை மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துகொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் இடியாப்ப மாவை சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்.
இதற்கடுத்து இந்த மாவில் அரைத்த முடக்கத்தான் கீரை சாறு சேர்த்து நன்கு பிணைந்துகொள்ளவும்.
பின்னர் இதில் சுடுதண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாக பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக இந்த மாவை இடியாப்பம் போல் பிழிந்து 15 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சத்தான முடக்கத்தான் கீரை இடியாப்பம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |