மீந்து போன இட்லியில் சூப்பரான இட்லி 65: எப்படி செய்யலான்னு தெரியுமா? இதோ
பொதுவாக தமிழ்நாட்டில் இட்லியை காலை மற்றும் இரவு உணவாக எடுத்துக் கொள்வது வழக்கம். இட்லிக்கு சூப்பரான காமினேஷன் எது என்றால் சட்னி, சாம்பார் தான்.
இட்லியில் சட்னியும், சாம்பாரை ஊற்றி சாப்பிடுவதே அப்படி ஒரு அமிர்தமாக இருக்கும். ஆனால், இட்லி அதிகமாக மீந்து விட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் சிலர் தூக்கி எறிந்து விடுவார்கள். அப்படியெல்லாம் இனி செய்ய வேண்டாம்.
மீந்துபோன இட்லியை வைத்து சூப்பரான ஒரு ரெபிசியை பார்ப்போம் -
தேவையான பொருட்கள்:
இட்லி - 10,
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி,
சீரகம் - சிறிதளவு,
கடலைமாவு - 2 ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
பெரிய வெங்காயம் - 2,
தக்காளி - 2,
மிளகாய்தூள் - சிறிதளவு,
செய்முறை
முதலில் தக்காளியை ஒரு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், இட்லியை துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். இதன் பின்னர், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் நீர் சேர்க்காமல் கடலைமாவு, மிளகாய்த்தூளை கலக்க வேண்டும். பின்னர், நறுக்கி வைத்த இட்லியை இந்த பாத்திரத்தில் போட்டு கடலைமாவும், மிளகாய்தூளும் நன்றாக அதில் கலக்கும் படி பிசற வேண்டும்.
பின்னர், ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் இந்த இட்லி துண்டுகளைபோட்டு நன்றாக பொரித்தெடுக்க வேண்டும். இன்னொரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர், அதில் தக்காளி சாறை ஊற்றி கெட்டியாக வதக்கிக்கொண்டே இருக்க வேண்டும். பின்னர், தக்காளி கெட்டியானதுடன் இட்லி துண்டுகளை போட்டு நன்றாக புரட்டி எடுத்தால் சுவையான் இட்லி 65 ரெடி.
அடுத்து அதில் தக்காளி சாறை ஊற்றி நன்றாக கெட்டியானவுடன், பொரித்து வைத்துள்ள இட்லி துண்டுகளை போட்டு ஒரு புரட்டு புரட்டி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால், சுவையான 'இட்லி 65' ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |