இட்லி பிரியரா? இப்படியான இட்லியை சாப்பிடுவதால் உடம்பு கெட்டு போகும் உஷார்
இட்லி ஆரோக்கியமான உணவு என்பதில் சந்தேகமில்லை! காலை உணவுக்கு சிறந்ததாக இருக்கும் இட்லியால் செரிமான கோளாறோ, கொலஸ்ட்ரால் பிரச்சனையோ ஏற்படாது.
தற்போது நாம் நேரமின்மை காரணமாக இட்லி, தோசை மாவுகளை கடைகளில் இருந்து வாங்கி பயன்படுத்துகிறோம். இப்படி வாங்கும் இட்லி மாவு நமது ஆரோக்கியத்திற்கு தீமையளிக்கும் என்பது தெரியுமா? முன்பெல்லாம் நாம் ஆட்டுக்கல்லில் தான் மாவு அரைத்து சாப்பிட்டு வந்தோம்.
கிரைண்டர் வந்தபின்பு, ஆட்டுக்கல் வீட்டில் காட்சிப் பொருளாக இருந்தது. அந்தவகையில் கடைகளில் மாவு விற்க ஆட்டுவதற்கான அவர்கள் பயன்படுத்தும் பெரிய பெரிய கிரைண்டர்கள் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது.
மாவு ஆட்டுகின்ற போது, அதன்பிறகு, கிரைண்டரைக் கழுவுகின்ற பொழுது, சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால், ஈகோலி என்னும் பாக்டீரியா தாக்கம் அதிக அளவில் ஏற்படும். இந்த ஈகோலி பாக்டீரியா தாக்கத்தினால் நாள்பட்ட வயிற்று வலி, உடல் வறட்சி, வாந்தி, மயக்கம், இரைப்பை நோய், தலை சுற்றுதல் ஆகிய அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
ஈகோலி என்னும் பாக்டீரியா நீங்கள் மாவை வேக வைத்தாலும் கூட, முழுமையாக அழிவதில்லை. கடைகளில் நாம் வாங்குகின்ற மாவினால் தான் இந்த பிரச்னைகள் என்றால், பாக்கெட்டில் அடைக்கப்படுகின்ற, இன்ஸ்டன்ட் மாவிலும் இதைவிட அதிக பிரச்னைகள் இருக்கிறது.
இன்ஸ்டன்ட் இட்லி மாவு மிக வேகமாக கெட்டுப் போய்விடக்கூடாது என்பதற்கானவே கால்சியம் சிலிகேட் சேர்க்கின்றனர். இதனால் உங்களுக்கு அஜீரணக் கோளாறுகள், வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்று வலி போன்றவை உண்டாகும்.