கனடா செல்லவுள்ள மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சி; IELTS தேர்வு குறித்து புதிய அப்டேட்!
IDP Education ஆனது IELTS தேர்வின் புள்ளிகள் குறித்து சில மாற்றங்களை அறிவித்துள்ளது. இது கனடா செல்லவுள்ள அதிகமான மாணவர்களுக்கு ஓர் சந்தோஷமான செய்தியாக இருக்கும் என்பது உறுதி.
IELTS என்பது
படிப்பு, இடம்பெயர்வு அல்லது வேலைக்கான மிகவும் பிரபலமான ஆங்கில மொழித் தேர்ச்சி சோதனைகளில் ஒன்றாகும்.
ஒவ்வொரு ஆண்டும் மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த தேர்வை மேற்கொள்கின்றனர் மற்றும் 11,000 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் மற்றும் குடியேற்ற அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
இப்போது தேர்வு எழுதுபவர்கள் SDS திட்டத்திற்கு அமைய செய்வார்கள். IELTS மிகப்பெரிய ஒரு மையங்களின் ஒன்றாக இருக்கின்றது.
இது இந்தியாவில் உள்ள 80 நகரங்களில் 150 க்கும் மேற்பட்ட இடங்களில் காகித அடிப்படையிலான பரீட்சைகளும் மற்றும் கணினி மூலம் வழங்கப்படும் பரீட்சைகளும் வழங்கப்படுகின்றது.
IDP அறிவித்தது என்ன?
IELTS தேர்வாளர்கள் ஆகஸ்ட் முதல் தேர்வின் அனைத்துப் பிரிவுகளிலும் குறைந்தபட்சம் 6.0 புள்ளிகளை பெற வேண்டிய அவசியமில்லை.
ஆகஸ்ட் 10 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒரு முறை ஒரு பரீட்சையில் தோன்றி கேட்டல்(Listening), பேசுதல்(Speaking),எழுதுதல்(Writing) மற்றும் வாசித்தல் (Reading) செய்து தேவையான மதிப்பெண்களை பெறவில்லை என்றால் மீண்டும் அதை தேர்வு செய்து மதிப்பெண் தேவையான ஒரு தேர்வை மட்டுமே செய்துக்கொள்ள முடியும்.
This is the response by IDP IELTS when we reached out to them on instagram to confirm this. pic.twitter.com/hKvVX9xlDO
— INC - Immigration News Canada (@CanadaImmigra20) June 9, 2023
கனடாவில் தங்கள் கல்வியைத் தொடர ஆர்வமுள்ள மாணவர்கள் SDS திட்டத்தின் கீழ் புதிய ஆங்கிலத் தேர்வுத் தேவைகளை செய்துக்கொள்ள முடியும்.
இந்த முறையானது தற்போது கனடா செல்லவுள்ள மாணவர்களுக்கு ஓர் சந்தோஷத்தை தரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |