உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்டிராலை வெளியேத்தணுமா? இந்த டயட்டை பின்பற்றினாலே போதுமாம்
பொதுவாக இன்றைய காலங்களில் பலர் கொலஸ்டிரால் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
மிக மோசமான வாழ்க்கை முறையும் மோசமான ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமும் தான் அதிக கொலஸ்டிரால் உண்டாகக் காரணமாக அமைகிறது.
இதன் கட்டுப்படுத்த மருந்துகள் எடுத்துக் கொண்டால் மட்டும் போதாது. ஆரோக்கியமான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த டயட்டைப் பின்பற்றுவது மிக மிக அவசியம்.
அந்தவகையில் தற்போது கொலஸ்டிராலை கட்டுப்படுத்த உதவும் டயட்டை ஒன்றை இங்கே பார்ப்போம்.
டயட்
திங்கள் கிழமை
காலை உணவு - ஒரு கப் காய்கறிகள், ஓட்ஸ் கஞ்சி, 1 கப் காபி
மதிய உணவு - 2 சப்பாத்தி, கீரைகள் மற்றும் பனீர்
இரவு - கேரட் தக்காளி கலவை ஒரு கப், 2 வேகவைத்த முட்டை, ஒரு பௌவுல் பீட்ரூட் சூப்
செவ்வாய்க் கிழமை
காலை உணவு - 2 வெந்தயக் கீரை சப்பாத்தி, 1 கப் தயிர்
மதிய உணவு - ஒரு கப் வெஜிடபிள் கலவை, ஒரு கப் குயினோவா
இரவு உணவு - 1 கப் பாலக் கீரை சூப், சிறிது பனீர், ஒரு கப் காய்கறி சாலட்
புதன் கிழமை
காலை உணவு - வேகவைத்த காய்கறிகள், 2 முட்டை வெள்ளைக்கரு மட்டும் (வேகவைத்தோ, ஆம்லெட் என ஏதாவது ஒரு வடிவில் எடுத்துக் கொள்ளலாம். மதிய உணவு - 2 சப்பாத்தி, 1 கப் காய்கறிகள் நிறைந்த கிரேவி, தயிர் அரை கப் இரவு உணவு - 1 கப் பூசணிக்காய் சூப், கிரில் சிக்கன் அல்லது க்ரில் மீன் 1 கப்
வியாழக்கிழமை
காலை உணவு - ஒரு கப் காய்கறிகள் நிறைந்த உப்புமா, ஒரு கப் முளைகட்டிய பயறு
மதிய உணவு - 2 சப்பாத்தி, பூசணிக்காய் கூட்டு
இரவு உணவு - ஒரு கப் வதக்கிய காய்கறிகள், ஒரு பௌவுல் சிக்கன் சூப்
வெள்ளிக்கிழமை
காலை உணவு - 2 பாலக் ரொட்டியுடன் ஒரு கப் தயிர்
மதிய உணவு - ராகியும் கடலைமாவும் சம அளவு சேர்த்து செய்த ஊத்தப்பம் 1, ஒரு கப் சாம்பார், மிக்ஸ்டு காய்கறி சாலட்
இரவு உணவு - தக்காளி கேரட் சாலட், பீட்ரூட் சூப் மற்றும் 2 வேகவைத்த முட்டை
சனிக்கிழமை
காலை உணவு - ஒரு கப் வேகவைத்த பாசிப்பயறுடன் ஒரு கப் காய்கறிகள் சாலட் எடுத்துக் கொள்ளுங்கள்
மதிய உணவு - உடைத்த கோதுமை சாதத்துடன் ஒரு கப் மிக்ஸ் வெஜிடபிள்
இரவு உணவு - 2 ரொட்டியுடன் சிறிது க்ரில் சிக்கன்
ஞாயிற்றுக்கிழமை
காலை உணவு - பாசிப்பயறு ரொட்டி, புதினா துவையல், ஒரு கப் தயிர்
மதிய உணவு - பிரௌன் அரிசி சாதம், காய்கறிகள் கலவை (கிரேவி)
இரவு உணவு - 2 சப்பாத்தி, 1 கப் மிக்ஸ்டு வெஜிடபிள் கிரேவி
எதை சாப்பிடக் கூடாது?
- கொழுப்புச் சத்து நிறைந்த முட்டையின் மஞ்சள் கரு, மட்டன், ஈரல் போன்ற இறைச்சி போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
- ரிஃபைண்ட் செய்யப்பட்ட அதிக கொழுப்புடைய மாவுப்பொருள்கள், பாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட்ஸ், பேக்கரி பொருள்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பட்டர், சீஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.