10-ம் வகுப்பு தேர்வு சமூக அறிவியல் பாடத்தில் இந்த கேள்விக்கு பதில் அளித்திருந்தால் ஒரு மதிப்பெண்
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மதிப்பெண்
நடந்து முடிந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரு மதிப்பெண் வினாவில் 4வது கேள்விக்கு மாணவர்கள் பதில் அளித்திருந்தால் ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தேர்வுத்துறை கூறியுள்ளது.
ஒரு மதிப்பெண் வினாவில் 4வது கேள்வியில் உள்ள கூற்றும் காரணமும் முரணாக உள்ளதால் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை கூறியுள்ளது.
அதாவது ஜோதிபா பூலே குறித்த கேள்வியின் கூற்றுக்கான காரணம் முரணாக இருப்பதாக ஆசிரியர் தரப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான சமூக அறிவியல் பாடத்தின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியதால் மதிப்பெண் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |