ஒருவேளை அஸ்வினுக்கு இப்படி ஆகியிருந்தால்... மோர்கன் அந்த காரியத்த செய்திருப்பாரா? நறுக்குன்னு கேட்ட பிராட் ஹாக்
அஸ்வின்-மோர்கன் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடர்பில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் நடந்த கொல்கத்தா-டெல்லி போட்டியின் போது அஸ்வின்-மோர்கன் இடையே ஏற்பட்ட வார்த்தை மோதல் சர்ச்சையை கிளப்பியது.
வெங்கடேஷ் ஐயர் வீசிய 19வது ஓவரின் கடைசி பந்தை அடித்த பந்த் ஒரு ரன் ஓடினார்.
பந்தை பிடித்து ராகுல் திரிபாதி வீசயது ரிஷப் பந்த் கையில் பட்டுச் சென்றது.
இதனையடுத்து, அஸ்வின் அழைக்க (அஸ்வின்-பந்த்) இருவரும் கூடுதல் ரன் எடுத்ததனர். இதை மோர்கன் விரும்பவில்லை.
டிம் சவுதி வீசிய 20வது ஓவரின் முதல் பந்தில் அஸ்வின் அவுட்டாகி பெவிலியன் திரும்பும் போது, 19வது ஓவரில் கூடுதலாக ரன் எடுத்தது தொடர்பில் முதலில் சவுதி அஸ்வினுடன் வார்த்தை மோதலி ஈடுபட்டார்.
அதன் பின் பெவிலியன் நோக்கி செல்ல தொடங்கிய அஸ்வினை மீண்டும் அழைத்த மோர்கன் வார்த்தை மோதலில் ஈடுபட்டார்.இறுதியில் தினேஷ் கார்த்திக் மடக்கி அஸ்வினை அனுப்பிவைத்தார்.
பலர் இச்சம்பவம் தொடர்பாக மறுபாட்ட விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். அந்த வரிசையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் ட்விட்டர் வாயிலாக அறுமையான கேள்வி எழுப்பியுள்ளார்.
If Pant (knowing the throw hit him) turned his back on Ashwin who looking for the second had to retreat causing a run out would Morgan have called him back?
— Brad Hogg (@Brad_Hogg) October 1, 2021
Unwritten rules should be scraped, play to the laws. #IPL2021 pic.twitter.com/fMSO63bZza
ஒருவேளை இரண்டாவது ரன் ஓட அழைத்த போது, பந்து தன் மீது பட்டுச்சென்றதை அறிந்து பந்த் வராமல் இருந்து, அஸ்வின் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பியிருந்தால், மோர்கன் அவரை அழைத்திருப்பாரா? என பிராட் ஹாக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், எழுதப்படாத விதிகள் நீக்கப்பட வேண்டும், சட்டங்களுக்கு ஏற்ப விளையாடுங்கள் என பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.