எனக்கு ஒரு பைசா கூட வேண்டாம்! நடிகை சித்ரா வழக்கில் உண்மையை வெளியில் கொண்டு வர... களம் காண தயாரான பிரபலம்
சித்ரா வழக்கில் நான் ஆஜராக வேண்டும் என அவர் குடும்பத்தார் என்னிடம் கோரிக்கை வைத்தால் நிச்சயமாக ஒரு பைசா கூட கட்டணம் வாங்காமல் இந்த வழக்கில் உண்மையை வெளியில் கொண்டு வருவதற்காக ஆஜராவேன் என உச்சநீதிமன்றத்தை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் திகதி சென்னை நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் தற்கொலை செய்து கொண்டார்.
அவரை தற்கொலைக்கு தூணடிய குற்றச்சாட்டில் கணவர் ஹேமந்தை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இவ்வழக்கை ஆர்டிஓ விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று முன் தினத்துடன் விசாரணை முடிவடைந்தது. இதை தொடர்ந்து ஆர்டிஓ திவ்யஸ்ரீ விசாரணை அறிக்கையை விரைவில் பொலிசாரிடம் வழங்கவுள்ளார்.
இருந்த போதிலும் சித்ராவை அவர் கணவர் ஹேமந்த் தான் ஏதோ செய்துவிட்டார் என அவர் தாயார் விஜயா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.
இது தொடர்பாக பேசிய உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, திருமணமான 7 ஆண்டுக்குள் மனைவி தற்கொலை செய்து கொண்டால் அதை ஆர்டிஓ தான் விசாரிக்க வேண்டும்.
அந்த வகையில் தான் சித்ரா வழக்கை ஆர்டிஓ திவ்யஸ்ரீ விசாரிக்கிறார்.
"சித்ரா வழக்கில் நான் ஆஜராக வேண்டும் என அவர் குடும்பத்தார் என்னிடம் கோரிக்கை வைத்தால் நிச்சயமாக ஒரு பைசா கூட கட்டணம் வாங்காமல் இந்த வழக்கில் உண்மையை வெளியில் கொண்டு வருவதற்காக ஆஜராக தயார். இதில் எந்தவொரு சந்தேகமும் கிடையாது. சித்ரா தரப்பும் சரி, அவர் கணவர் தரப்பும் சரி சித்ரா தற்கொலை செய்து விட்டார் என கூறி ஒதுங்கி போய்விட முடியாது. ஆர்டிஓ அறிக்கை முழுமையாக சமர்பிக்கப்பட்ட பின்னர் தான் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு பெயில் தரப்படும். அதனால் தான் சிறையில் உள்ள ஹேமந்துக்கு பெயில் மறுக்கப்பட்டது. ஆர்டிஓ விசாரணை அறிக்கையில் சித்ரா குடும்பத்தாருக்கு திருப்தி இல்லை என்றால் அவர்கள் உயர்நீதிமன்றத்தை அனுகலாம். பொலிசார் இந்த வழக்கில் வெளிப்படையாக எதுவும் சொல்லாததற்கு காரணம் உள்ளது. ஆர்டிஓ விசாரணைக்கு முன்னர் எதாவது விடயத்தை ஊடகத்தில் வெளியிட்டால் அதில் தொடர்புடையவர்கள் தப்பித்து செல்வதற்கு வாய்ப்பு உள்ளது" என கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.