தல தோனி இல்லையென்றால் நானும் IPL யில் இல்லை: இணையத்தில் பரவும் வைரல் வீடியோ!
சுரேஷ் ரெய்னாவை 2022ம் ஆண்டிற்கான IPL வீரர்கள் ஏலத்தில் எந்த அணியும் எடுக்க முன்வராத நிலையில், டோனி அடுத்த சீனில் விளையாடாவிட்டால் நானும் விளையாட மாட்டேன் என்ன சுரேஷ் ரெய்னா பேசிய வீடியோ சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த 10 சீசனாக சுரேஷ் ரெய்னா தனது சிறந்த பங்களிப்பை தந்து பல போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றிபெற செய்துள்ளார்.
மேலும் IPLலில் அதிக ரன் குவித்த வீரர்களின் வரிசையிலும் நான்காவது இடத்தில் உள்ளார்.
Why yrr ??#SureshRaina | @ImRaina pic.twitter.com/FtGQuIO45o
— ABHISHEK BAMNAVAT ?? (@CoverDrive001) February 13, 2022
இவர் 2018ஆம் ஆண்டு அனைத்து விதமான இன்டர்நேஷனல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவித்ததை தொடர்ந்து அவர் IPL போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார்.
இந்த நிலையில் 15வது சீசனுக்காக நடைபெற்ற வீரர்களின் முதல் நாள் ஏலத்தில் எந்த அணியும் ரெய்னா எடுக்க முன்வரவில்லை, இதனை தொடர்ந்து இரண்டாம் நாள் கண்டிப்பாக ரெய்னாவை ஐபிஎல் அணிகள், ஏதாவது தங்கள் அணியில் எடுக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
இரண்டாம் நாளில் விலைபோகாத வீரர்களை அணிகள் தேர்வு செய்து மீண்டும் ஏலத்தில் விட்டு சில வீரர்களை குறைந்த விலைக்கு வாங்கி தங்கள் அணியில் சேர்த்து கொள்வர், ஆனால் அந்த பட்டியலில் கூட ரெய்னா பெயர் இடம் பெறாத நிலையில் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் நாங்கள் 2021ஆம் ஆண்டு கோப்பையை வென்றால் எப்படியாவது டோனியை 2022ஆம் ஆண்டு விளையாட சம்மதிக்கவைப்பேன் அவ்வாறு டோனி அடுத்த சீனில் விளையாடாவிட்டால், நானும் விளையாட மாட்டேன் என்ன சுரேஷ் ரெய்னா பேசிய வீடியோ சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.