டயானா உயிருடன் இருந்திருந்தால் ஹரி-மேகன் திருமணம் நடந்திருக்காது! மறைந்த இளவரசியின் பட்லர் தகவல்
டயானா உயிருடன் இருந்திருந்தால், இளவரசர் ஹரி மேகனுக்கு பதிலாக அவரது முன்னாள் காதலிகளில் ஒருவரை திருமணம் செய்திருப்பார் என்பதை மறைந்த இளவரசியின் பட்லர் கூறியுள்ளார்.
ஹரி - மேகன் திருமணம்
இளவரசர் ஹரி அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலை 2016-ல் சந்தித்த பிறகு 2018-ல் திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் 2020-ல் அரச குடும்பத்தை விட்டு விலகினர். அவர்கள் இப்போது அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் வசிக்கிறார்கள்.
அதன்பின்னர் நேர்காணல்கள், புத்தகங்கள், பாட்காஸ்ட்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் அரச குடும்பத்தை பலமுறை தாக்கியுள்ளனர்.
Getty Images
ஹரியின் மறைந்த தாய் டயானாவுக்கு பல ஆண்டுகளாக சேவை செய்து, குழந்தையாக இருந்த ஹரியுடன் நேரத்தை செலவிட்டவர் பால் பர்ரெல் (Paul Burrell).
ஹரியின் முன்னாள் பெண் தோழிகள்
ஹரி மேகனிடமிருந்து பிரிந்துவிடுவாரா என்பதற்கான சாத்தியம் குறித்து கருத்து தெரிவித்த பட்லர் பால் பர்ரெல், இளவரசர் ஹரி, அவரது தாய் உயிருடன் இருந்திருந்தால், முன்னாள் பெண் தோழிகளில் செல்சி டேவி (Chelsy Davy) அல்லது கிரெசிடா போனஸ் (Cressida Bonas) யாரேனும் ஒருவரை திருமணம் செய்திருப்பார் என தெரிவித்துள்ளார். அல்லது இங்கிலாந்தைச் சேர்ந்த மற்றொரு உயர்குடிப் பெண்ணை திருமணம் செய்திருப்பார் என்று கூறினார்.
Getty Images
இளவரசர் ஹாரி 2004 முதல் 2011 வரை ஜிம்பாப்வேயின் கோடீஸ்வரரின் மகளான டேவியுடன் டேவியுடன் பழகினார். பின்னர் அவர் தனது உறவினரான இளவரசி யூஜெனி மூலம் போனஸை சந்தித்தார்.
2018-ல் இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலின் அரச திருமணத்தில் டேவி மற்றும் போனஸ் இருவரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.