மலட்டுத்தன்மை நீங்க இந்த கீரையை வாரத்திற்கு 2 முறை மதிய உணவோடு சாப்பிடுங்க!
தண்டுக்கீரை இனத்தைச் சேர்ந்த சிறுகீரை நிறைய கிளைகளுடன் சுமார் 20 செ.மீ. உயரம் வரை செங்குத்தாக வளரும். இந்தச் செடி மெல்லிய தோற்றமுடையது.
சிறுகீரை சுமார் 10 செ.மீ. உயரம் வளர்ந்தவுடன் அதைப் பறித்து உணவுக்குப் பயன்படுத்த வேண்டும். இதைப் பருப்போடு சேர்த்து சாம்பார், கூட்டு, பொரியல் போன்ற கறி வகைகளைச் செய்து சாப்பிடலாம்.
வைட்டமின் ஏ, பி, சி, இரும்புச்சத்து,பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் சிறுகீரையில் நிறைந்துள்ளன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.
சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை மற்றும் அதை சார்ந்த உறுப்புகள் சிறப்பாக செயல்பட சிறுகீரை உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இது உதவுகிறது.
நார்ச்சத்து நிறைந்துள்ள கீரைகளில் சிறுகீரையும் ஒன்று. இதன் காரணமாக இதை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் உணவு நன்றாக செரிமானம் ஆக உதவுகிறது.மேலும் தீவிரமான மூலம், மலச்சிக்கல் பிரச்சனைகளையும் சுலபத்தில் சிறுகீரை தீர்க்கிறது.
மனிதர்களாகிய நமக்கு மாறிவரும் கால, சுற்று புற சூழ்நிலைகளாலும் பல விதமான நோய்கள் நம்மை தாக்குகிறது. இத்தகைய நோய்களிலிருந்து நம்மை காத்து கொள்ள சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம் அப்படி சத்து நிறைந்த உணவு வகைகளாக கீரைகள் இருக்கின்றன. இதில் சிறுகீரை பயன்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மஞ்சள்காமாலை
ஓட்ஸ் கஞ்சி அல்லது பார்லி தண்ணீருடன் சிறு கீரை பொரியலை சேர்த்து சாப்பிடவேண்டும் இவ்வாறு சாப்பிட்டு வந்தால் கல்லீரல் கோளாறு மஞ்சள்காமாலை குணமாகும்
ரத்தசோகை
இந்தக் கீரையில் இரும்புச்சத்து தாராளமாக இருப்பதால் ரத்தத்தில் உள்ள நச்சு கழிவுகள் வெளியேறும். ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளும் ரத்தசோகையைத் தடுக்கும்.
மலச்சிக்கல்
நார்ச்சத்து நிறைந்துள்ள கீரைககளில் சிறுகீரையும் ஒன்று. இதன் காரணமாக இதை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் உணவு நன்றாக செரிமானம் ஆக உதவுகிறது. மேலும் தீவிரமான மூலம், மலச்சிக்கல் பிரச்சனைகளையும் சுலபத்தில் சிறுகீரை தீர்க்கிறது.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இக்கீரையை தினமும் சாப்பிட்டால் இன்சுலின் இயல்பாக சுரக்கும்.
சிறுநீரக கற்கள்
சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்கவும், சிறுநீரகம், சிறுநீர்ப்பை போனற உறுப்புகளை பாதுகாக்கிறது. வாரம் ஒருமுறை சிறுகீரை சமைத்து சாப்பிடுவது சிறுநீரகங்களுக்கு நல்லது.
மலட்டுத்தன்மை நீங்க சிறுகீரையை அடிக்கடி எடுத்துக் கொள்வதால், ஆண்களின் உயிரணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இதனால், ஆண்களுக்கு விந்தணுக்கள் உருவாகி மலட்டுத்தன்மை நீங்கும்.
கண்புரை
சிறுகீரையில் வைட்டமின் ஏ அதிகம் நிறைந்திருக்கிறது. இது கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் விழிப்படலம், கருவிழி ஆகியவற்றின் நலத்தையும் மேம்படுத்துகிறது.