இந்தியா மட்டும் 2-வது டெஸ்ட்டில் தோற்றால்...? கோஹ்லி காலி தான்: இங்கிலாந்து முன்னாள் வீரர்
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தோற்றால் கோஹ்லியின் கேப்டன் பதவி பறிபோகும் நிலை ஏற்படும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, அங்கு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதால், இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 14-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்த போட்டி குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பானேசர் கூறுகையில், கோஹ்லியின் தலைமையில் இந்திய அணி சிறப்பாக விளையாடவில்லை என்றும் ரஹானேவின் தலைமையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருவதால் கோஹ்லி தற்போது அழுத்தத்தில் இருக்கிறார்.
அடுத்த போட்டியில்(இரண்டாவது டெஸ்ட் போட்டியில்) இந்திய அணி ஒரு வேளை தோல்வி அடைந்தால் கோஹ்லியின் கேப்டன் பதவி பறி போகும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.