இனி எங்களை சீண்டினால்., இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்த எச்சரிக்கை
இந்தியா எதிர்காலத்தில் எங்களை சீண்டினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் - இந்தியா மோதல்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து ராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தது.
4 நாட்கள் நடைபெற்ற இந்த ராணுவ மோதல் பேச்சுவார்த்தைக்கு பிறகு மே 10ம் திகதி முடிவுக்கு வந்துள்ளது.
இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கை நாளையுடன் ஒரு வருடத்தை நிறைவு செய்கிறது.

பாகிஸ்தான் எச்சரிக்கை
இந்நிலையில் எதிர்காலத்தில் இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் எதுவும் நடத்தினால் அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் தகவல் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத்தின் வான், நிலம் மற்றும் நீர் ஆகிய தளங்களில் பாதுகாப்பு திறன்கள் இன்று பல மடங்கு அதிகரித்து இருப்பதாகவும், எங்களுக்கு எதிராக திட்டங்கள் உருவானால் அதன் தொடக்கத்தையும் அதன் முடிவையும் நாங்கள் தான் தீர்மானிப்போம் என்றும் அமைச்சர் கவாஜா ஆசிஃப் எச்சரித்துள்ளார்
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |