பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் அறுவை சிகிச்சை பொய்யா? எச்சரிக்கும் ஆதரவாளர்கள்
பொது மேடைகளில் இருந்து திடீரென்று மாயமாகியுள்ள கேட் மிடில்டன் தொடர்பில் பல்வேறு கட்டுக்கதைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
பொய்யான தகவலை வெளியிட்டு
கேட் மிடில்டன் நிலை குறித்து அரண்மனை வெளியிட்டுள்ள தகவல்கள் உண்மையாக இருக்கலாம் என்றே அரச குடும்பத்து தீவிர ஆதரவாளர்களான ரேச்சல் போவி மற்றும் ராபர்ட்டா ஃபியோரிட்டோ ஆகியோர் நம்புகின்றனர்.
ஆனால் கேட் மிடில்டன் விவகாரத்தில் அரண்மனை பொய்யான தகவலை வெளியிட்டு வருகிறது என்றால் அது அரச குடும்பத்து உறுப்பினர்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்தும் என்றே எச்சரிக்கின்றனர்.
கேட் மிடில்டனின் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சை தொடர்பில் கென்சிங்டன் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், முடிந்தவரை தனது பிள்ளைகளுக்காக இயல்பாக இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை பொதுமக்கள் புரிந்துகொள்வார்கள் என்றும், தமது தனிப்பட்ட மருத்துவ தகவல்கள் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் அவசியம் ஏற்படவில்லை என்றும் அவர் நம்புவதாகவும் குறிப்பிடப்பட்டது.
அத்துடன், பகிர்ந்துகொள்ளக் கூடிய தகவல் இருந்தால் மட்டும் கென்சிங்டன் அரண்மனை இன்னொரு அறிக்கை வெளியிடும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தது. ஆனால் இந்த விளக்கம் சமூக ஊடக மக்களுக்கு போதுமானதாக இருக்கவில்லை.
அவர்கள் பல்வேறு கட்டுக்கதைகளை சமூக ஊடகங்களில் நிரப்பினர். மன்னர் சார்லஸ் தமக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை வெளிப்படையாக அறிவித்துள்ளதையும் அதில் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நம்பகத்தன்மையை அழித்துவிடும்
சிலர், அவரது சகோதரி பிப்பா மிடில்டன் போன்று மாறுபட்ட அறுவை சிகிச்சைக்கு கேட் முயற்சி செய்திருக்கலாம் என்றும் பதிவு செய்துள்ளனர். மட்டுமின்றி, கேட் மிடில்டன் கோமா நிலையில் இருப்பதாகவும் சிலர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளனர்.
ஆனால் கேட் மிடில்டன் ஆபத்தான கட்டத்தில் இருப்பதை அரண்மனை வட்டாரங்கள் மூடி மறைத்து வருகிறது என்றால், இப்படியான ஒரு சிக்கலில் இருந்து அரச குடும்பம் மீண்டு வருவது கடினம் என்றும் ரேச்சல் போவி எச்சரித்துள்ளார்.
அப்படியான பெரிய பொய்யானது அரச குடும்பத்தின் நம்பகத்தன்மையை முற்றிலுமாக அழித்துவிடும் என்றார். அரண்மனை வட்டாரத்தை பொறுத்தமட்டில் வதந்திகளை பொய்யாக்கும் திறன் உள்ளது,
ஆனால் சில சமயங்களில் அவர்கள் வேண்டாம் என்று தெரிவு செய்கிறார்கள் என்றே ராபர்ட்டா குறிப்பிட்டுள்ளார். கேட் மிடில்டன் தொடர்பான இந்த ரகசியம் காக்கும் நடவடிக்கை அரண்மனை வட்டாரத்தால் முன்னெடுக்காமல் இருந்திருக்கலாம் என்றும் ராபர்ட்டா குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |