ஸ்மார்ட்போனில் மொபைல் டேட்டா வேலை செய்யவில்லையா! இதோ எளிய வழிமுறைகள்
நம்முடைய ஸ்மார்ட்போன்களில் மொபைல் டேட்டா சரியாக வேலை செய்யவில்லை என்றால் உடனடியாக சில வழிமுறைகளை பின்பற்றினால் போதும், நம்முடைய மொபைல் டேட்டா மீண்டும் பழைய வேகத்தில் இயங்க ஆரம்பித்து விடும்.
எளிய வழிமுறைகள்
நம்முடைய ஸ்மார்ட்போன்களில் மொபைல் டேட்டா சரியாக வேலை செய்யவில்லை என்றால் ஏற்படும் மெதுவான திரைகள் மற்றும் அவசரமான நேரத்தில் ஒரு இணைய பக்கத்தில் இருந்து மற்றொரு இணைய பக்கத்திற்கு செல்வதற்கு எடுத்து கொள்ள அதிப்படியான நேரங்கள் ஆகியவை நமக்கு முதலில் ஏற்படுவது எரிச்சல் தான்.
GettyImages
இவற்றை மீண்டும் சரி செய்வதற்கு நம்மிடம் வேறு எதுவும் மாயாஜாலம் இல்லை என்றாலும், சில வழிமுறைகள் மூலம் நம்முடைய ஸ்மார்ட்போன்களில் மீண்டும் இணைய சேவையை விரைவாக இயங்க செய்ய முடியும்.
பிளைட் மோடு
முதல் வழிமுறை ஸ்மார்ட்போன்களில் உள்ள பிளைட் மோடு வசதியை ஆன் செய்து பார்ப்பது, இவ்வாறு செய்வதன் மூலம் மொபைல் தரவு நெட்வொர்க்குகள் பெரும்பாலான நேரங்களில் சரி செய்யப்படலாம்.
பிளைட் மோடு ஆன் செய்வது தீர்வினை தரவில்லை என்றால் உங்கள் ஸ்மார்ட் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு சிறிது நேரத்திற்கு பிறகு ஆன் செய்து இயக்கி பார்ப்பது.
சிம் கார்டு மீண்டும் எடுத்து செருகவும்
உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து நெட்வொர்க் சிம் கார்டை வெளியே எடுத்துவிட்டு மீண்டும் சொருகி உபயோகித்து பார்ப்பது மிகச் சிறப்பாக செயல்படும் மற்றும் உங்கள் சிக்கலை தீர்க்கும் உடனடி முயற்சியாகும்.
நெட்வொர்க்-கை மாற்றுவது
உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்தினால், அதில் சிறப்பாக செயல்படும் நெட்வொர்க்கிற்கு உங்களது மொபைல் டேட்டா சேவையை மாற்றுவது.
நெட்வொர்க் வரம்பை சரிபார்ப்பது
பெரும்பாலான நேரங்களில் நாம் நம்முடைய நெட்வொர்க் டேட்டா வரம்பை தாண்டி இருக்கும் பட்சத்தில் அல்லது நம்முடைய தினசரி டேட்டா உபயோக அளவினை நிறைவு செய்து இருக்கும் பட்சத்தில் இணைய சேவைகள் நம்முடைய ஸ்மார்ட்போன்களில் செயல்படாமல் போகலாம்.
டேட்டா பயனீட்டு அளவை சம்பந்தப்பட்ட நெட்வொர்க் நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவில் பயனர்களுக்கு குறுஞ்செய்திகள் மூலமாக அனுப்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போன் புதுப்பித்தலை உறுதிப்படுத்தல்
ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அவ்வப்போது வழங்கும் மென்பொருள் புதுப்பிப்புகளை நான் செயல்படுத்த தவறும் போது சில சமயங்களில் மொபைல் போனில் இணைய சேவை வேலை செய்யாமல் போகலாம்.
எனவே தங்கள் ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்பட்டு இருக்கும் புதுப்பிப்புகளை செயல்படுத்துவதன் மூலம் உங்கள் மொபைல் டேட்டா பிரச்சனைகளை சரி செய்யலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |