மொயின் அலி கிரிக்கெட் விளையாடலனா? ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்திருப்பார்: சர்ச்சையை கிளப்பிய பிரபல பெண்
இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான மொயின் அலியை, வங்கதேச பெண் எழுத்தாளர் ஒருவர், அவர் கிரிக்கெட் மட்டும் விளையாட வரவில்லை என்றால், ஐஎஸ் அமைப்பில் சேர்ந்திருப்பார் என்று கூறியிருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக வெளிநாட்டு வீரர்கள் பலர் இந்தியா சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான மொயின் அலியை இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ளது.
இந்நிலையில், வங்கதேச பெண் எழுத்தாளரும், இஸ்லாமிய மத எதிர்பாளருமானடாஸ்லிமா நஷ்ரீன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மொயின் அலி கிரிக்கெட் விளையாடாமல் இருந்திருந்தால் ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்திருப்பார் என டுவிட் செய்தார்.
இதைக் கண்ட கிரிக்கெட் பிரபலங்கள் பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர், குறிப்பாக இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர், சாம் பில்லிங்ஸ் போன்றவர்கள் மொயின் அலி குறித்த டுவீட்டை டாஸ்லிமா நீக்க வேண்டும் என கூறினர்.
ஆர்ச்சரோ, நீங்கள் நலமாகத்தான் இருக்கிறீர்களா? மனநலம் சரியாகத்தான் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையடுத்து டாஸ்லிமா நஷ்ரீன் அடுத்த ஒரு தன்னுடைய டுவிட்டில், நான் பதிவிட்ட டுவீட் ஹேட்டர்ஸ்களுக்கு வெறுப்பாக இருக்கும்.
இஸ்லாம் மதத்திற்கு ஆதரவாக இருப்பவர்கள் என்னை அவமானப்படுத்த முயல்கிறார்கள். நான் இஸ்லாமிய வெறித்தனத்தை எதிர்க்கிறேன்.
மனிதக் குலத்தின் மிகப்பெரிய துயரங்களில் ஒன்று, பெண்கள் சார்பு இடதுசாரிகள், பெண்கள் விரோத இஸ்லாமியவாதிகளை ஆதரிப்பதுதான் என பதிவிட்டுள்ளார்.
இதனால் இவரது டுவிட்டர் அக்கவுண்டை பலரும் புகார் அளித்து வருகின்றனர்.
இதனால் டுவிட்டர் அக்கவுண்ட் முடக்கப்படுவதுடன், அவர் விரைவில் கைது கூட செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.


