இது மட்டும் குறைந்தால் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திடுவேன்! உணர்ச்சிபூர்வமாக பேசிய கோலி
என்னுடைய ஆக்ரோஷம் களத்தில் குறையும்போது கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்துவிடுவேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
துபாயில் நேற்று நடந்த நமிபியா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியுடன் டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகிவிட்டார். இதன்பின்னர் கோலி பேசுகையில், அனைத்து உணர்ச்சிகளில் இருந்தும் முதலில் விடுபடுகிறேன்.
நான் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தது மிகப்பெரிய கவுரவம். என்னுடைய வேலைப்பளுவை நிர்வகிப்பதற்கும், சமநிைலப்படுத்துவதற்கும் இதுதான் சரியான நேரம்.
6 முதல் 7 ஆண்டுகளா தீவிரமான கிரிக்கெட் விளையாடினேன், களத்தில் எவ்வாறு இருந்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு குழுவாக, அணியாக நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம்.
இந்த உலகக் கோப்பையைவிட்டு மிக தொலைவு செல்லவில்லை என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் டி20 போட்டியில் மகிழ்ச்சியாக ஒன்றாக இணைந்து விளையாடிய சில வெற்றிகளைப் பெற்றிருக்கிறோம்.
நான் கேப்டன் பதவியிலிருந்து இறங்கினாலும், என்னுடைய ஆக்ரோஷம், உற்சாகம் களத்தில் குறையாது. களத்தில் என்னுடைய ஆக்ரோஷம் குறையும்போது நான் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திவிடுவேன்.
நான் கேப்டனாக இல்லாத காலகட்டத்தில்கூட நான் ஒவ்வொரு போட்டியும் எவ்வாறு செல்கிறது என்பதை கவனித்துக்கொண்டிருப்பேன். நான் வெறும் ஆளாக நின்றுகொண்டிருக்கமாட்டேன் என கூறியுள்ளார்.