ஜேர்மன் மண்ணில் புடின் காலடி எடுத்து வைத்தால்.., நீதித்துறை அமைச்சர் எச்சரிக்கை!
ஜேர்மனியின் எல்லைக்குள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நுழைந்தால், அவர் கைது செய்யப்படுவார் என்று ஜேர்மன் நீதித்துறை அமைச்சர் மார்கோ புஷ்மேன் (Marco Buschmann) எச்சரித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் போர்க்குற்றம் புரிந்ததற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) கைது வாரண்ட் பிறப்பித்ததை அடுத்து ஜேர்மன் நீதி அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஜேர்மன் செய்தி நிறுவனமான Die Zeit-ன் படி, புடின் ஜேர்மன் மண்ணில் காலடி எடுத்து வைத்தால் பெர்லின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விதிகளுக்கு கட்டுப்பட்டு வாரண்டை நிறைவேற்றும் என்று ஜேர்மன் தூதர் தெளிவுபடுத்தினார்.
TASS
சர்வதேச கைது வாரண்ட் விடுத்த நிலையிலும், உக்ரைனுக்குள் சென்ற புடின்!
சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைனில் ரஷ்யா வெற்றிகரமாக ஆக்கிரமித்துள்ள துறைமுக நகரமான மரியுபோலுக்கு சென்றுள்ளார்.
மார்ச் 17 அன்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் விசாரணை அறை II ரஷ்ய ஜனாதிபதிக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது. வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய ஜனாதிபதி உக்ரேனிய நகரமான மரியுபோலுக்கு சென்றுள்ளார். ஹெலிகாப்டர் மூலம் மரியுபோலுக்கு சென்ற புடின், முழு நகரத்தையும் காரில் சுற்றிப்பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கினறன.
[EPA-EFE/
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) ரோம் சட்டத்தை அங்கீகரிக்காததால், அது பிறப்பித்த கைது வாரண்டையும் ரஷ்யா அங்கீகரிக்கவில்லை. இருப்பினும், சர்வதேச நீதிமன்றத்தை அங்கீகரிக்கும் நாடுகளில் புடினுக்கு கைது செய்யப்படும் அச்சுறுத்தல் உள்ளது.