விண்வெளியில் ஒருவர் இறந்துவிட்டால் என்ன நடக்கும்? இறந்த உடலை என்ன செய்வார்கள்?
நிலவை ஆய்வு செய்ய சென்றவர்களில் இருபது பேர் கடந்த 60 வருடங்களில் இறந்துள்ளனர்.
நாசா விண்ணூர்தி விபத்தில் 1986 மற்றும் 2003ஆம் ஆண்டு பதினான்கு பேரும், சோயுஸ் 11 மிஷனில் 1971ஆம் ஆண்டு மூன்று பேரும், அப்பல்லோ ஏவப்பட்டபோது நடந்த தீ விபத்தில் மூன்று பேரும் இதுவரை இறந்துள்ளனர்.
விண்ணிற்கு செல்வது இப்போது இயல்பாகிவிட்டதால், அங்கு செல்பவர்கள் சிலபேர் இறக்கும் வாய்ப்பும் உள்ளது.
நாசா 2025ஆம் ஆண்டு நிலவுக்கு ஒரு குழுவையும், 2030க்கு பிறகான பத்தாண்டுகளில் செவ்வாய்க்கு ஒரு குழுவையும் அனுப்பவுள்ளது.
இப்போது நமது மனதில் ஒரு கேள்வி எழலாம், அதாவது விண்ணில் இருக்கும்போதே யாரவது இறந்துவிட்டால் அவர் உடல் என்ன ஆகும் என்று.
பூமியை ஒட்டிய விண்வெளி மையத்தில் யாரவது இறந்துவிட்டால் விண்வெளியில் உள்ள குழு சில மணிநேரத்தில் அந்த உடலை கேப்ஸ்யூலில் சில மணி நேரத்தில் பூமிக்கு கொண்டுவரப்படும்.
அதேபோல் ஒருவர் நிலவில் இறந்துவிட்டால் அவர் சில நாட்களில் பூமிக்கு கொண்டுவரப்படுவார்.
உடலை விரைவாக பூமிக்கு கொண்டு வருவதால் அதை பதப்படுத்த வேண்டிய தேவை இருக்காது.
விண்வெளி குழு பாதுகாப்பாக பூமிக்கு திரும்புவதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஆனால் இதுவே 300 மில்லியன் மைல் தூரம் பயணப்பட்டு செவ்வாய் கிரகத்தை சென்றடைந்து ஒருவர் இறந்தால் அந்த குழு பூமிக்கு உடலை கொண்டுவந்துவிட்டு திரும்ப செல்வது கடினமாக இருக்கும்.
எனவே அவ்வுடலை பிரத்யேகமான பையில் அல்லது அறையில் பதப்படுத்தி அவர்களது மிஷனை முடித்துவிட்டு பூமிக்கு திரும்பும்போது கொண்டு வருவர்.
இவையனைத்தும் வானூர்தி அல்லது வானூர்தி நிலையத்தில் இறப்பவர்கள் அனைவருக்கும் பொருந்தும்.
இதுவே ஒருவர் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வானூர்திக்கு வெளியில் சென்றால். வெற்றிடம், உயர்அழுத்தம் மற்றும் போதிய ஆக்ஸிஜன் இல்லாத காரணத்தால் மூச்சுத்திணறல் மற்றும் ரத்த கொதிப்பால் இறந்து விடுவர்.
அப்படி இறந்துவிட்டால் எரிக்க கூடாது ஏனென்றால் இதற்கு அந்த குழு நீண்டநாள் உபயோகப்படுத்தும் ஆற்றல் தேவைப்படும்.
அதேபோல் புதைத்தால் உடம்பில் தோன்றும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் அந்த கோளை மாசுபடுத்தும். அதனால் ஒரு பையிலே பதப்படுத்தி வைத்து பூமிக்கு கொண்டு வருவார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |