சுவிட்சர்லாந்துக்குள் பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்யாமலே நுழைந்துவிட்டால் என்ன ஆகும்?
சுவிட்சர்லாந்துக்குள் பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்யாமலே நுழைந்துவிட்டால் என்ன ஆகும்?
நீங்கள் சுவிட்சர்லாந்துக்குள் பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்யாமலே நுழைந்துவிட்டால், உங்களுக்கு பெருந்தொகை ஒன்று அபராதமாக விதிக்கப்படும். அத்துடன், உடனடியாக உங்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்படும்.
டிசம்பர் மாதம் 4ஆம் திகதி முதலே, கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலுமிருந்து சுவிட்சர்லாந்துக்கு வருவோர், பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் உங்கள் நாட்டிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு விமானம் ஏறும் முன்பே, விமான நிறுவன அலுவலர்கள் உங்களிடம் பிசிஆர் கொரோனா பரிசோதனை ஆதாரத்தை கேட்பார்கள் என்பதால், நீங்கள் சுவிட்சர்லாந்துக்குள் பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்யாமலே நுழைய வாய்ப்பில்லை.
ஆனாலும், அப்படியே நீங்கள் பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்யாமலே சுவிஸ் விமான நிலையத்தை வந்தடைந்தீர்களானால், நீங்கள் 200 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் செலுத்தவேண்டியிருக்கும்.
அத்துடன், உடனடியாக உங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து, அதன் முடிவு சம்பந்தப்பட்ட மாகாணத்துக்கு தெரிவிக்கப்படும் என்கிறது சுவிட்சர்லாந்து அரசின் அறிக்கை ஒன்று.
அத்துடன், விடயம் என்னவென்றால், உங்கள் நாட்டைவிட, சுவிட்சர்லாந்தில் பிசிஆர் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் மிகவும் அதிகமாக இருக்கலாம்.
சுவிட்சர்லாந்தில் பிசிஆர் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் 110 சுவிஸ் ஃப்ராங்குகளிலிருந்து 195 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை இருக்கலாம்.
நீங்கள் பிசிஆர் கொரோனா பரிசோதனையின் முடிவுகளை அச்சிடப்பட்ட காகித வடிவிலோ அல்லது டிஜிட்டல் வடிவிலோ வைத்திருக்கலாம். அது, ஆங்கிலம் அல்லது, இத்தாலி, ஜேர்மன் அல்லது பிரெஞ்சு ஆகிய எந்த சுவிஸ் மொழியிலும் இருக்கலாம்.
அத்துடன், நுழைவு படிவம் ஒன்றையும் நீங்கள் பூர்த்தி செய்யவேண்டியிருக்கும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.
நான் பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளாமல், விமான நிலையத்திலும் சிக்காமலே தப்பிவிட்டேன். அப்போது என்ன ஆகும்?
வெளிநாட்டிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வருவோர், தங்களுடன் பிசிஆர் கொரோனா பரிசோதனை முடிவுகள் வைத்திருக்கிறார்களா என்று சோதிக்குமாறு சுவிஸ் அரசாங்கம், ஹொட்டல்கள், தங்கும் விடுதிகள் முதலானவற்றிற்கு அறிவுறுத்தியுள்ளதால், நீங்கள் அங்கு சிக்கிக்கொள்ளலாம். அப்போது எவ்வளவு அபராதம் செலுத்துவீர்கள் என்பது யாருக்குமே தெரியாது!