பிரதமர் போட்டியில் தோற்றுப்போனால் ரிஷி என்ன செய்வார்? அவரே சொன்ன பதில்
பிரதமர் போட்டியில் ரிஷி தோற்றுப்போனால் லிஸ் ட்ரஸ்ஸின் கீழ் சுகாதாரச் செயலராக பொறுப்பேற்கலாம் என சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால், அதை அவர் மறுத்துள்ளார்.
பிரித்தானிய பிரதமருக்கான போட்டியில் தோற்றுப்போனால் ரிஷி என்ன செய்வார்?
பிரதமராகும் லிஸ் ட்ரஸ்ஸின் கீழ் ஏதேனும் பொறுப்பு வகிப்பாரா?
பிரதமர் போட்டியில் தோற்றுப்போனால் ரிஷி தோற்றுப்போனால், அவர் பிரதமராகும் லிஸ் ட்ரஸ்ஸின் கீழ் சுகாதாரச் செயலராக பொறுப்பேற்கலாம் என சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அது குறித்து ரிஷியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
image -AP
அதற்கு பதிலளித்த ரிஷி, என்னுடைய நோக்கம் அதுவல்ல, லிஸ்ஸும் அப்படித்தான் நினைப்பார் என்று நினைக்கிறேன் என்றார்.
அதாவது, அடுத்த மாதம் பிரித்தானியாவுக்கான பிரதமர் அறிவிக்கப்பட உள்ள நிலையில், லிஸ் ட்ரஸ் பிரதமராக அறிவிக்கப்படுவாரானால், அவருக்குக் கீழ் பணி செய்யும் எண்ணம் தனக்கு இல்லை என சூசகமாக பதிலளித்துள்ளார் ரிஷி.
பிரதமர் போட்டியில் இறுதி வேட்பாளர்களாக லிஸ் ட்ரஸ்ஸும், ரிஷி சுனக்கும் உள்ள நிலையில், அது தொடர்பான வாக்கெடுப்புகள் மற்றும் கருத்துக்கணிப்புகள் லிஸ் ட்ரஸ்ஸுக்கு ஆதரவாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.