இந்த உயிரினம் வீட்டிற்கு வந்தால் செய்வினை இருக்கிறது என்பது அர்த்தமாம்
தீய சக்திகளை வசியம் செய்வதற்காக செய்யப்படும் ஒரு வகை பூஜை முறையை செய்வினை, பில்லி, சூனியம் என்கிறோம்.
ஒரு சில வேளைகளில் நமது வீட்டில் தொடர்ந்து பிரச்சினைகள் மற்றும் அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்றவற்றால் யாரேனும் ஏதேனும் செய்வினை செய்திருப்பார்களோ என நமக்கு தோன்றும்.
அந்த வகையில் ஒரு சில விலங்குகள் வீட்டிற்குள் வந்தால் செய்வினை இருக்கிறது என்பது அர்த்தமாம்.
என்னனென்ன விலங்குகள் வீட்டிற்குள் வந்தால் ஆபத்து?
விஷம் கக்கும் மிருகங்கள்
நம் வீட்டிற்குள் விஷம் கக்கும் மிருகங்கள் வந்தால் பில்லி சூனியம் இருக்கிறது என்பது அர்த்தம்.
பாம்புகள்
வீட்டிற்குள் பாம்பு வந்தால் வீட்டிற்குள் மனக்கசப்பு வரப்போகிறது என்பதற்கான அறிகுறியாகும்.வீட்டை சுற்றி பாம்புகள் காணப்பட்டால் பரவாயில்லை ஆனால் வீட்டிற்குள் வருவது அவ்வளவு நல்லதல்ல.
கருவண்டு/கருங்குளவி
கருவண்டு அல்லது கருங்குளவி எனப்படும் இந்த வண்டு வந்தால் அல்லது நுழைய முற்பட்டால் யாராவது செய்வினை செய்து அதன் மூலம் ஏவியிருக்கலாம். விரட்ட விரட்ட திரும்ப திரும்ப வருமாக இருந்தால் ஏதோ ஒரு கெட்டது நடக்கவிருப்பதை குறிக்கும்.
பூரான்
உங்கள் வீட்டிற்குள் பூரான் வந்தால் செய்வினை மூலம் பணக்கஷ்டம் அல்லது மனக்கஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இல்லாவிடில் யாரேனும் நோய்வாய்ப்பட போகிறார்கள் என்பது அர்த்தம். வீட்டை சுற்றி சேறும் சகதியும் இருந்தால் பூரான் வரும் ஆனால் இவை எதுவுமே இல்லாமல் பூரான் வருகிறது அது பெரிய ஒரு கஷ்டத்தை தரப்போகிறது என்பது அர்த்தம்.
வௌவால்
அடுத்தபடியாக வீட்டிற்குள் வௌவால் வரவேக்கூடாதாம். அதுவும் இரத்த காயத்தோடு வந்து வீட்டிற்குள் வந்து விழுந்தால் அது ஏதோ ஒரு கெடுதலை தரப்போகிறது. பகல் நேரத்தில் வந்தால் செய்வினை மூலம் ஒரு இழப்பு ஏற்படப்போகிறது என்பது அர்த்தம்.
ஆகவே இவ்வாறான உயிரினங்கள் வீட்டிற்குள் வராதவாறு வீட்டினை ஒழுங்கான வேலி அடித்து அல்லது ஏதேனும் ஒரு முறையில் பாதுகாப்போடு வைத்திருக்க வேண்டும் மற்றும் வீட்டினை சுத்தமாகவும் கடவுள் வாசம் செய்யும் இடமாகவும் வைத்திருங்கள்.