ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு வந்தால்... பிரித்தானிய மக்கள் கருத்து
ட்ரம்ப் உக்ரைனை ஜனாதிபதியாகிய ஜெலன்ஸ்கியை நடத்திய விதம் உலக மக்கள் பலருக்கும் கோபத்தை உருவாக்கியுள்ளது.
பிரித்தானியர்களும் அதற்கு விதி விலக்கல்ல!
ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு வந்தால்...
மறைந்த பிரித்தானிய மகாராணியாரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், இளவரசர் ஹரி மேகன் திருமணம் என அரண்மனையில் என்ன விழா நடந்தாலும் தவறாமல் அதைப் பார்க்க மக்களோடு மக்களாக ஆஜராகிவிடுவார் Joanna Chin.
ஆனால், ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு வந்தால் இம்முறை அவரைப் பார்க்க செல்லமாட்டேன் என்று கூறியுள்ளார் Joanna.
இப்படிப்பட்ட ஒருவர் அமெரிக்காவின் ஜனாதிபதியா என எண்ணிப்பார்க்கக்கூட முடியவில்லை. ஆபத்தான ஆள் ட்ரம்ப் என்கிறார் Joanna. பெரும்பாலான பிரித்தானியர்கள் கருத்து இப்படித்தான் இருக்கிறது.
அதே நேரத்தில், ட்ரம்பை பிரித்தானியாவுக்கு அழைத்த பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் முடிவை ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள்.
அமெரிக்கா பிரித்தானியாவின் பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வின் ஒரு முக்கிய அங்கம். ஆகவே, பிரதமருக்கு வேறு வழியில்லை.
அவருக்கு ட்ரம்பைப் பிடித்தாலும் சரி, பிடிக்கவில்லை என்றாலும் சரி, பிரதமர் அவருக்கு அழைப்பு விடுத்துத்தான் ஆகவேண்டும் என்கிறார்கள் Tony மற்றும் Pat Simpson தம்பதியர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |