அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றால் இது பாதிக்கும்: கனடா பிரதமர்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால் குறிப்பிட்ட சில விஷயங்களில் பாதிப்பு ஏற்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் அமைச்சருடன் பேச்சு
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ இஸ்ரேலிய அமைச்சர் பென்னி கான்ட்ஸ் உடன் தொலைபேசி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக X இணைய தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரேலிய அமைச்சருடனான பேச்சுவார்த்தையின் போது பொதுமக்கள் பாதுகாப்பு முக்கியத்துவம் மற்றும் பொதுமக்களுக்கான மனிதாபிமான உதவிகள் கிடைப்பது ஆகியவற்றை உறுதி செய்வது குறித்து வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
அதே சமயம் ஹமாஸ் படையினர் பொதுமக்களை பாதுகாப்பு கேடயங்களாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் வெற்றி
இந்நிலையில் 2024ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால் காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் உலகளாவிய முயற்சியை அது மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
Reuters
2024ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடும் முன்னணி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |