இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குதை தடை செய்தால்... இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை தடை செய்வது ஈரானுக்கும் அதன் கூட்டாளர்களுக்கும்தான் நன்மையை உண்டாக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு எச்சரித்துள்ளார்.
மேக்ரானுடன் தொலைபேசியில் உரையாடிய இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, நேற்று, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தவேண்டும் என்று மேக்ரான் கூறியிருந்த நிலையில், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை தடை செய்வது ஈரானுக்கும் அதன் கூட்டாளர்களுக்கும்தான் நன்மையை உண்டாக்கும் என எச்சரித்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு.
ஈரான் தனது கூட்டாளர்களுக்கு உதவுகிறது. அதேபோல இஸ்ரேலின் நண்பர்கள் தனக்கு உதவவேண்டும் என்றும், ஆயுதங்கள் வழங்குவதற்கு தடைவிதிக்கக்கூடாது என்றும் இஸ்ரேல் எதிர்பார்க்கிறது என்றும் கூறிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, அப்படி ஆயுதங்கள் வழங்குவதை தடை செய்வது, தீமை செய்யும் ஈரானை வலிமைப்படுத்தத்தான் செய்யும் என்றும் கூறியுள்ளார்.
மேக்ரான் என்ன கூறியிருந்தார்?
சமீபத்தில், பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தவேண்டும் என்று கூறியிருந்தார்.
பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண முனையவேண்டும் என்று கூறியுள்ள மேக்ரான், லெபனானன் இன்னொரு காஸாவாக ஆகக்கூடாது என்றும், மோதல் அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்கே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |