ரூ.5 லட்சத்திற்கு Car Loan வாங்கினால்.. 3 ஆண்டுகளுக்கு மாத EMI எவ்வளவு கட்ட வேண்டும்?
ரூ.5 லட்சம் கார் கடன் (Car Loan) வாங்கினால் 3 ஆண்டுகளுக்கு மாத EMI எவ்வளவு கட்ட வேண்டும் என்று இந்த இந்த பதிவில் பார்க்கலாம்.
Car Loan மாத EMI
தற்போதைய காலத்தில் கார் வாங்க வேண்டும் என்று பலருக்கும் கனவாக இருக்கும். அதற்கு, பல்வேறு வங்கிகள் தங்களுடைய நிலையான வட்டி விகிதத்தில் கார் லோனை வழங்கி வருகிறது.
இப்போது நாம் பேங்க் ஆஃப் பரோடாவில் (bank of baroda) 3 ஆண்டுகளுக்கு ரூ.5 லட்சம் கார் கடன் வாங்கினால் மாதத்திற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்று பார்க்கலாம்.
பாங்க் ஆஃப் பரோடா வங்கியானது 8.95 சதவீத வட்டி விகிதத்தில் கார் லோன் வழங்குகிறது. இதில், சிவில் மதிப்பெண் 800 அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே இந்த வட்டி விகிதத்தில் கார் லோன் வழங்கப்படும்.
இந்த வட்டி விகிதமானது உங்களது சிவில் மதிப்பெண்களுக்கு ஏற்ப வங்கிக்கு வங்கி மாறுபடும்.
இந்த கணக்கீட்டின் படி ஒருவர் பேங்க் ஆஃப் பரோடாவில் (bank of baroda) 3 ஆண்டுகளுக்கு ரூ.5 லட்சம் கார் கடன் வாங்கினால் மாதத்திற்கு ரூ.15,888 -யை EMI ஆக செலுத்த வேண்டும்.
அதன்படி நீங்கள் வட்டியாக மொத்தம் ரூ.71,976 செலுத்த வேண்டும். அந்தவகையில், 3 ஆண்டுகளுக்கு ரூ.5 லட்சம் கார் கடன் வாங்கினால் மொத்தமாக ரூ.5,71,966 செலுத்த வேண்டும்.
மேலும் தகவலுக்கு நீங்கள் பேங்க் ஆஃப் பரோடா (bank of baroda) வங்கிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |